districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வாழ்வாதாரத்தை காக்க சிறப்பு நலத்திட்டங்கள் வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தல்

நாமக்கல், மார்ச் 23- வாழ்வாதாரத்தை காக்க சிறப்பு நலத்திட்டங்கள் ஏற் படுத்த வேண்டும், என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு  வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட  பொதுக்குழு கூட்டம் மற்றும் மே 5 இல் நடக்கும் வணிகர் சங்க  அதிகார பிரகடன மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம், நாமக் கல்லில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர்  ஜெயக்குமார் வெள்ளையன் தலைமை வகித்தார். செய லாளர் வீரக்குமார் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜு, பொருளாளர் சதக்கத்துல்லா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலத் தலைவர் விக்கிரமராஜா சிறப்பு  அழைப்பாளராக பங்கேற்று, 42 ஆவது வணிகர் அதிகார பிர கடன மாநாடு குறித்து விளக்கி பேசினார். அப்போது, மே  5 இல் நடைபெறும் வணிகர் சங்க அதிகார பிரகடன மாநாட் டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநிலம் முழு வதும் இருந்து 5 லட்சம் வணிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும்  அவர்கள் குடும்பத்தினர் கலந்து கொள்ள உள்ளனர், என்றார். மேலும், நாமக்கல் நகரில் இடமாற்றம் செய்யப்பட்ட அரசு  மருத்துவமனை, ஏற்கனவே இயங்கி வந்த இடத்தில் பொது மக்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதி தொடர்ந்து 24 மணி  நேரமும் அடிப்படை வசதிகளோடு செயல்படுத்தப்பட வேண் டும். தமிழக அரசால் கடுமையாக உயர்த்தப்பட்ட தொழில் வரி, சொத்துவரி ஆகியவற்றால் பொதுமக்களும், வணிகர்களும் பாதிக்கப்படுகின்றனர். அரசு இதனை மறு  பரிசீனை செய்து வரியை குறைக்க வேண்டும். தமிழ்நாடு  வணிகர் நலவாரியம் வழங்கும் குடும்ப நலநிதியை ரூ.10  லட்சம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பேரிடர் காலங்க ளில் வணிகர் நலவாரிய உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில் சிறப்பு நலத்திட்டங்களை ஏற்படுத்த வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மார்க்சிஸ்ட் கட்சியின் செந்தொண்டர் அணிவகுப்பு

சேலம், மார்ச் 23- சுதந்திர போராட்ட வீரர்கள் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோ ரின் நினைவுதினத்தையொட்டி, மார்க்சிஸ்ட் கட்சியின் செந்தொண் டர் அணிவகுப்பு ஞாயிறன்று நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24வது அகில இந்திய மாநாடு  ஏப். 2-6 தேதிகளில் மதுரையில் நடை பெறுகிறது. இதனையொட்டி மாநி லம் முழுவதும் மாவீரன் பகத்சிங்  நினைவுநாளில் மாவட்டந்தோறும் செந்தொண்டர் அணிவகுப்பு பிரச் சாரம் ஞாயிறன்று நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சிபிஎம் சேலம்  மாவட்டக்குழு அலுவலகமான சேலம் சிறை தியாகிகள் நினைவக  வளாகத்தில் உள்ள காரல் மார்க்ஸ் சிலை முன்பு இருந்து, செந்தொண் டர் அணிவகுப்பு நடைபெற்றது. இதில், செந்தொண்டர் கன்வீனர் ஏ. முருகேசன், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். காரல்  மார்க்ஸ் சிலை முதல் விஜயா மருத்து வமனை, சீரங்கம்பாளையம் வழி யாக ராமகிருஷ்ணா பார்க் பகுதி யில் அணிவகுப்பு நிறைவடைந் தது. தருமபுரி இதேபோன்று, தருமபுரி அரசு  மருத்துவமனை அருகில் துவங்கிய  செந்தொண்டர் அணிவகுப்பை மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் துவக்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபா லன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.முத்து, சி நாகராசன், சோ.அருச்சுனன், தி.வ.தனுசன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.என். மல்லையன், நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு ஆகியோர் உரை யாற்றினர். நேதாஜி நெடுஞ்சாலை, கடைவீதி வழியாக தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே  செந்தொண்டர் அணிவகுப்பு நிறை வடைந்தது.  ஈரோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஈரோடு மாவட்டக்குழு அலுவ லகம் முன்பு நடைபெற்ற செந் தொண்டர் அணிவகுப்பு நிகழ் விற்கு, கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினரும், செந் தொண்டர் பொறுப்பாளருமான ஜி. பழனிசாமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்  கே.சுவாமிநாதன் சிறப்புரையாற்றி னார். இதில் மாவட்டச் செயலா ளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணி யன், மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் கே.துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.சுந்தரராஜன் நன்றி கூறி னார்.

வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஈரோடு, மார்ச் 23- ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட் டம் சனியன்று நடைபெற்றது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித் தார். இக்கூட்டதில், சோலார் பேருந்து நிலைய பணிகள், பவா னிசாகர் அணை மற்றும் கீழ்பவானி நீர்பாசனத் திட்டங்க ளின் பேரில் திட்ட நிபந்தனை பட்டா பெற்றவர்களுக்கு தற் போது திட்ட நிபந்தைனையை தளர்வு செய்து அயன் பட்டா  வழங்குவதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. பெருந்துறையில் நொய்யல் ஆற்றின் வடக்கு கரையில் கொடுமணல் அகழ்வாய்வில் கண்டெடுத்த பொருட் களை காட்சிப்படுத்திட ஈரோடு மாவட்டத்தில் தொல்லியல் துறையின் மூலம் அருங்காட்சியம் அமைத்தல், ஜவுளி பூங்கா  அமைத்தல், மஞ்சள் ஏற்றுமதி மையம் தரம் உயர்த்துதல், கைத்தறி பூங்கா நிறுவுதல், அரசு மருத்துவமனையில் புதிய  ஒருங்கிணைந்த ஆய்வகம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர  சிகிச்சைப் பிரிவு கட்டுதல் உள்ளிட்ட பணிகளின் முன்னேற் றம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத் துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா,  ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற  உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், ஏ.ஜி.வெங்கடாசலம், மாந கராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், மாவட்ட வரு வாய் அலுவலர் சு.சாந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

பூங்காக்களில் குறைந்தது  சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

உதகை, மார்ச் 23- மழை காரணமாக உதகையில் உள்ள பூங்காக்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தே காணப் பட்டது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், வார விடுமுறையான ஞாயிறன்று உதகை ரோஜா பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்களை கண்டு ரசித்தும் புகைப்படம் எடுத்து மகிர்ந்தனர். இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால் சுற்றுலாத் தலங்களில் கூட்டம் என்பது சற்று குறைந்தே காணப்பட்டது.