districts

img

ஓணம் பண்டிகை: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாட்டம் நடைபெறும். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தற் போது கேரள மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வர துவங்கியுள்ளனர். இவர்கள் அரசு தாவரவியல் பூங்கா படகு இல்லம் ரோஜா பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குவிந்துள்ளனர். மேலும் 10 நாட்கள் தொடர்ந்து ஓணம் பண்டிகை முன்னிட்டு கேரள மாநிலத்தில் தொடர் விடுமுறை இருக்கும் என்பதால் நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகரித்து காணப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

உதகை, செப்.8- நீலகிரி மாவட்டத்தில் ஓணம்  பண்டிகை முன்னிட்டு, மலையா யாளிகள் அத்தப்பூ கோலமிட்டு  கொண்டாடினர். ஆவணி மாத திருவோண நட் சத்திரத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை கேரளாவில் பிரபல மானது. நீலகிரி மாவட்டத்தில் மலை யாள மொழி பேசும் மக்கள் அதிகள வில் வாழ்ந்து வருகின்றனர். இத னால் இந்த ஆண்டு நீலகிரி மாவட் டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறி விக்கப்பட்டு இருந்தது. இதன்படி உத கையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் பிலிருந்து ஓணம் பண்டிகை கொண் டாட்ட தொடங்கியது. முக்கிய நாளான வியாழனன்று மலையாள மொழி  பேசும் கேரள மக்கள் தங்களது வீடு களில் ஓணம் பண்டிகையை கொண் டாடினர். மகாபலி மன்னனை வர வேற்கும் விதமாக வீடுகளில் அத்தப் பூ கோலமிட்டு இருந்தனர். இதைய டுத்து உறவினர்களுக்கும் நண்பர்க ளுக்கும் இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். மேலும் அத் தப்பூ கோலத்துடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். இதேபோல் உதகையில் உள்ள பல்வேறு பள்ளிகள், தனியார் நிறுவ னங்களில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை சிறப்பாக கொண் டப்பட்டது. முன்னதாக பெண்கள்  புத்தாடை அணிந்து வீட்டுவாசல்க ளில் பல்வேறு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.