districts

img

கோவையில் ராணுவ தகுதித் தேர்வு ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர்கள்

கோவை, நவ.4- இந்திய ராணுவத்தில் சேர்வதற்கான தகுதி தேர்வு கோவை யில் நடைபெறுவதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர்.  இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட  பணிகளுக்கு திங்கள்கிழமை முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி  வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மட்டு மில்லாமல் நாடு முழுவதும் இருந்து பங்கேற்க உள்ளனர். மொத்தம் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகின்றன. திங்களன்று முதல் வருகின்ற நவ.10 ஆம் தேதியன்று வரை  இந்த ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் எனவும் நாளொன் றுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து  வரும் இளைஞர்களுக்கு தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், திங்களன்று தெலுங்கானா, குஜராத், கோவா, பாண்டிச்சேரி, லட்சத் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கான உடல் தகுதித் தேர்வு நடை பெற்றது. செவ்வாயன்று (இன்று) ஆந்திரா, கர்நாடக மாநிலங் களுக்கும், புதனன்று மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநி லங்களை சேர்ந்தவர்களுக்கும், 7 மற்றும் 8 ஆகிய தேதி களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் தேர்வுகள் நடை பெற உள்ளது. 18 வயது முதல் 30 வயது வரையிலான வர்களுக்கு ஒரு கட்டமாகவும் 31 வயது முதல் 42 வயது  வரையிலானவர்களுக்கு மற்றொரு கட்டமாகவும் தேர்வுகள்  நடத்தப்படுகின்றன. முதல் நாள் தேர்வில் பங்கேற்பதற்காக ஞாயிறன்று இரவே கோவையில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் குவிந்தனர். மேலும், வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள்  வருகையை ஒட்டி கோவை ரயில் நிலையத்தில் அதிகளவில்  கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இன்னும் பத்து நாட்களுக்கு  நடைபெறும் இந்த தேர்வில் வருகின்ற நாட்களில் அதிகளவில்  வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் கோவை நோக்கி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்க ளுக்கான அடிப்படை வசதிகளை கோவை மாவட்ட  நிர்வாகம் மற்றும் தேர்வு நடத்தும் மையம் இணைந்து செய்து  தரப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.  ஞாயிற்றுக்கிழமை அன்று நூற்றுக்கணக்கான வட மாநில இளைஞர்கள் கோவையில் குவியத்துவங்கினர். இவர்கள் கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல்  பெரும் அவதியடைந்தது குறிப்பிடத்தக்கது.