districts

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞரின் உடல் காவல் துறையினர் தீவிர விசாரணை

பொள்ளாச்சி, ஏப்.3- பொள்ளாச்சி அருகே உள்ள பாலமநல் லூர் கிராமத்தில் தனியார் மாந்தோப்பில் உடல் அழுகிய நிலையில் இருந்த இளைஞ ரின் உடலை மீட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பாலமநல்லூர் புதூர் கிராமத் தில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்த மான மாந்தோப்பில் சனியன்று காலை அவரது மகன் குமரவேல் தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மாம ரம் ஒன்றின் அருகே அழுகிய நிலையில் மனித உடல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, அவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இதைத்தொடர்ந்து, நடைபெற்ற விசா ரணையில், உயிரிழந்து கிடந்தவர் பாலம நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து (27) என்பதும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூலி வேலைக்கு செல்வதாக கூறி சென்ற வர், வீடு திரும்பாததும் முதற்கட்ட விசா ரணையில் தெரியவந்தது.  மேலும், பணிக்கு செல்வதாக கூறி சென்ற வீரமுத்து, மாந்தோப்புக்கு எதற் காக சென்றார், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா, இல்லையா யாரே னும் கொலை செய்து தூக்கில் தொங்க  விட்டார்களா என்று பல்வேறு கோணங்க ளில் காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மாந்தோப்பில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலி பரின் பிரேதம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.