districts

தஞ்சாவூர்,கும்பகோணம் மற்றும் சீர்காழி முக்கிய செய்திகள்

விதைப் பரிசோதனைக்கு ஆன்லைன் பதிவு கட்டாயம்


தஞ்சாவூர் ஏப்.28- 2019-20 நிதியாண்டு முதல் விவசாயிகள், விதை விற்பனையாளர்கள் மற்றும் விதை விநியோகஸ்தர்கள் விதைப்பரிசோதனை மேற்கொள்ள ஆன்லைனில் பதிவு செய்வதுகட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆய்வு முடிவுகளை பகுப்பாய்வு நாட்களுக்குள் விரைவாக தெரிந்து கொள்ளலாம். ஆன்லைனில் பதிவிற்கு ஏதுவாக தஞ்சாவூர் காட்டுத்தோட்டத்தில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள், விதை மாதிரி, பெயர், முகவரி, அலைபேசி எண், பயிர் விவரம் ஆகியவற்றுடன் பகுப்பாய்வு கட்டணமாக ரூ.30 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். விதைப் பரிசோதனை மூலம் விதையின் முளைப்புத் திறனை தெரிந்து கொண்டு விவசாயிகள் பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


காரில் தவறவிட்ட தங்க நகைகள் மீட்பு


கும்பகோணம், ஏப்.28- மன்னார்குடி அனைத்து துறை ஓய்வூதியர் சங்க முன்னாள் பொறுப்பாளர் பன்னீர்செல்வம். இவர் குடும்பத்துடன் சென்னை செல்வதற்காக கும்பகோணம் வழியாக காரில் சென்ற போது ஸ்ரீநகர் காலனி அருகே காபிகடையில் காரை நிறுத்தி விட்டு சென்ற போது தனதுபேக்கில் வைத்திருந்த 8 பவுன் நகை மற்றும் செல்போனைதவற விட்டுள்ளார். இதையடுத்து சங்க நகர செயலாளர் அன்புமணி மாவட்ட செயலாளர் ராஜகோபால் மற்றும்சங்கப் பொறுப்பாளர்கள் ஆலோசனையில் கும்பகோணம்மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் அப்பகுதி சிசிடிவி கேமரா மூலம் காவல்துறையினர் விசாரணை செய்து, பன்னீர்செல்வம் தவறவிட்ட 8 பவுன் நகை மற்றும் செல்போன் பேக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. துரிதமாக செயல்பட்டகாவல் அதிகாரிகளுக்கு ஓய்வூதியர் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


மணல் கடத்திய 4 பேர் கைது


சீர்காழி, ஏப்.28-நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கொள்ளிடம் காவல்துறையினர் ஆற்றின்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மணியிருப்பு கிராம சாலையில்மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து,மாட்டு வண்டி உரிமையாளர்கள் முதலைமேடு திட்டு கிராமத்தைச் சேர்ந்த மகாதேவன்(46), நாதல்படுகை முருகன்(44), பெரியநடுவக்காடு கிராமம் கல்யாணசுந்தரம்(48) மற்றும் அளக்குடி சீனிவாசன்(38) ஆகியோரை கைது செய்தனர்.


புத்தூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம் 


சீர்காழி, ஏப்.28-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-20ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை படிப்புக்களுக் கான விண்ணப்ப படிவங்கள் 22ந் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மே 6ந் தேதி மாலை 5 மணிக்குள்பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்கவேண்டும். சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் கல்லூரி அறிவிப்பு பலகையிலும், மாணவர்களுக்கான கலந்தாய்வு அட்டையிலும் கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்சிமற்றும் எஸ்டி மாணவர்கள் தங்களின் சாதிச் சான்றிதழின் நகலை கொடுத்து விட்டு விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று கல்லூரி முதல்வர் லெட்சுமி தெரிவித்தார்.