கோவை, டிச.31– புத்தாண்டு சமயத்தில் அவசர கால சிகிச்சைகளுக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஏற் படுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப் பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இருப்பினும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடிப் பது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் என்பதை கருத்தில் கொண்டு கோவை அரசு மருத்துவமனையில் “ஜீரோ டிலே வார்டு” என்னும் அவசர சிகிச்சை வார்டு துவங்கப்பட்டுள் ளது.
புத்தாண்டு தினத்தன்று திடீர் விபத்துகள் நிகழும் சம யத்தில் அவசர சிகிச்சைக்காக இந்த சிறப்பு வார்டு செயல் படுத்தப்பட உள்ளதாக மருத்துவமனை முதல்வர் காளி தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், 30 படுக்கை வசதிகள் கொண்ட இந்த சிறப்பு வார்டில் அவசர சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து முன் னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விபத்துகளோ அல்லது தீக்காயங்களோ திடீரென நிகழும் பட்சத்தில் தேவையான சிகிச்சை இவ்வார்டில் உடனடியாக வழங்கப்படும். மேலும் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் போன்றவை யும் தேவையையொட்டி விரைவில் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.