நாமக்கல், டிச.24- திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மலைப்பாதை தடுப்புச்சுவரில் மோதி கார் ஒன்று விபத்திற்குள் ளானது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோ விலில் மார்கழி மாதத் தில் மரகதலிங்கம் தரிச னம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வை காண ஏராளமானனோர் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவி லாக கருதப்படும் இந்த மலைக்கோவிலுக்கு திருச்செங் கோடு அடுத்துள்ள சீதாராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மரக்கடை நடத்தி வரும் தரம்ஸ்ரீ என்பவர் தனது மனைவி மகளுடன் வந்துள்ளார். மலைப்பாதையில் செவ்வாயன்று அதிகாலை காரில் சென்ற பொழுது, கீழே இருந்து மலையேறும் போது இடதுபுறம் எதிர்பாராத விதமாக கார் தடுப்புச்சுவர் மீது மோதி தடுப்புச்சுவர் நடுவில் வாகனம் நின்றது. இதனையடுத்து அவ்வழியே சென்ற பொதுமக்கள், காரில் தவித்துக் கொண்டிருந்தவர்களை பத்திரமாக மீட்ட னர். இதனையடுத்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கார் பத்திரமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து திருச்செங்கோடு காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.