districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பாலியல் வன்கொடுமை - முதியவருக்கு  15 ஆண்டு சிறை

ஈரோடு, செப்.7- பாலியல் வன்கொடுமை வழக்கில், முதியவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அரச்சலூர் சில்லாங்காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (61). இவர் அப்பகுதியைச் சேர்ந்த 2 சிறுமிகளை அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொ டுமை செய்ததாக அரச்சலூர் காவல் நிலையத்தில் கடந்த 20-8-2021ல் புகார் செய்தனர். இப்புகாரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ஆர்.மாலதி செவ்வா யன்று தீர்ப்பளித்தார். அதில், 2 சிறுமிகளை திட்டமிட்டு பாலி யல் வன்கொடுமை செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட சங்கருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை,  ரூ.5,000 அபராதம் என 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது. மற்றொரு பிரிவில் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிபதி, இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுப விக்க உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கு தலா ரூ.3.50 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க தமிழக அர சுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

சேலம், செப்.7- ஆத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி சென்டர் மீடியனில் இருந்த மின்  விளக்கு கம்பத்தில் கை வைத்த போது மின்சாரம் தாக்கி சம் பவ இடத்திலேயே உயிரிழந்தார். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான பச்ச முத்து (48). இவர் தனது குடும்பத்தை பிரிந்து பத்து ஆண்டு களாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செய்தித்தாள்களை விற்பனை செய்து கொண்டு கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், பச்சமுத்து தலைவாசல் பேருந்து நிலையத்திலிருந்து சேலம் – சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப் போது நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் அமைக்கப் பட்டுள்ள மின் விளக்கு கம்பத்தின் மீது கை வைத்த போது மின் சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்ப வம் குறித்து தகலவறிந்த தலைவாசல் காவல் துறையினர் சம் பவ இடத்திற்கு வந்து, பச்சமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

கூடலூர் - கல்பெட்டா இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

உதகை, செப்.7- கூடலூர்-கல்பெட்டா இடையே இயக்கப்பட்ட அரசு பேருந்து மீண்டும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிய டைந்து வருகின்றனர். கூடலூரிலிருந்து வயநாடு மாவட்டம், சுல்தான்பத்தேரி, வைத்திரி ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கூட லூரில் இருந்து கல்பெட்டாவுக்கு அரசு பேருந்து இயக்கப் பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்ப டுத்தப்பட்டதால், கல்பெட்டாவுக்கு இயக்கப்படும் அரசு பேருந்து ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து, ஒரு வாரம்  மட்டுமே பேருந்து இயக்கப்பட்டது. அதன் பின்னர் இயக்கப் படவில்லை. இதன் காரணமாக இருமாநில மக்களும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூரில் இருந்து கல்பெட்டா வுக்கு பேருந்து இயக்கப்பட்ட நிலையில், ஊரடங்கால் நிறுத் தப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பி விட்டதால்,  ஒரு வாரத்துக்கு முன்பு மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. இதனால் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ஏராளமானவர்கள் பயணம் செய்து வந்த னர். தற்போது மீண்டும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப் பட்டுள்ளது. எனவெ, பொதுமக்களின் நலன்கருதி இந்த பேருந்தை தொடர்ந்து இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், நடத்துனர்கள் பற்றாக்குறையால் தற்காலிகமாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

ஏற்காட்டிற்கு 2 ஆவது நாளாக போக்குவரத்து தடை

சேலம், செப்.7- ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவுகள் சீரமைக்கப்பட்ட நிலை யில், மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபா யம் உள்ளதால் புதனன்றும் போக்கு வரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில  நாட்களாக கன மழை பெய்து வருகி றது. அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டில்  திங்களன்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள 60 அடி பாலப்பகுதியில் ஏற் பட்ட மண்சரிவால் திங்களன்று இரவு முதல் அஸ்தம்பட்டி வழியாக ஏற்காடு  செல்லும் மலைப்பாதையில் போக்கு வரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டன. மண்சரிவால் பாறைகளும், மண் குவியலும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தற்போது அகற்றப்பட்டுள்ளன. இதனிடையே மண்சரிவு ஏற்பட்ட பகுதி களை செவ்வாயன்று மாவட்ட ஆட்சி யர் செ.கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இதற்கிடையே ஏற்காட்டில் செவ்வா யன்று இரவும் சாரல் மழை பெய்தது. இதனால் மேலும் பாறைகள் உருண்டு  மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.  எனவே, 2 ஆவது நாளாக புதனன்றும்  போக்குவரத்து தடை செய்யப்பட்டுள் ளது. ஏற்காடு செல்பவர்கள் குப்பனூர்  வழியாக செல்ல மாவட்ட நிர்வாகம்  அறிவுறுத்தியுள்ளது. இதனால் அந்த  சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டுள்ளது. மேலும், பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளதால் 2 நாட்கள் கழித்து போக்குவரத்து தொடங்கப் படும் என்று அதிகாரிகள் தெரிவித்த னர்.

வாலிபர் தற்கொலை

தருமபுரி, செப்.7- தருமபுரி மாவட்டம், நல் லம்பள்ளி அருகே உள்ள  லளிகம் புதுவீதியைச் சேர்ந்த வர் முருகன். இவரது மகன் கோகுல் (19). டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்து விட்டு வீட்டில் தறி வேலை செய்து வந்துள்ளார். இவர்  அடிக்கடி தனது தாயாரு டன் தகராறில் ஈடுபட்டு வந்த தாகவும், இதனால் கடந்த ஒரு வார காலமாக யாருட னும் பேசாமல் தனிமையில் இருந்து வந்ததாகவும் தெரி கிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண் டுள்ளார். இதுகுறித்து தகவ லறிந்த அதியமான்கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கோகுலின் உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர் பாக வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

ஆன்லைன் ரம்மி: பணமிழந்த மாணவர் தற்கொலை முயற்சி

சேலம், செப்.7- ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 75 ஆயி ரம் ரூபாய் பணத்தை இழந்த கல்லூரி மாண வர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து ஆபத்தான நிலையில் சிகிச் சைக்காக சேலம் தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள சதாசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் மகன் சூரியபிரகாஷ் (20). இவர் தேவியாக்குறிச்சியில் உள்ள தனி யார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சூரிய பிரகாஷ் தனது செல்போனில் அவ்வப்போது ஆன் லைன் ரம்மி விளையாடி பொழுதை கழித்து வந்துள்ளார். ஆர்வமாக விளையாடிய ஆன் லைன் ரம்மி விளையாட்டில் தனது தந்தை சீனி வாசன் வங்கி கணக்கிலிருந்து 75 ஆயிரம்  ரூபாய் பணத்தை விளையாடி தோற்றுள் ளார். இந்நிலையில், மாணவனின் தந்தை சீனி வாசன் லோன் கட்டுவதற்காக வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வரும்படி கூறி யுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாண வன் வங்கியில் பணம் இல்லாதது தெரிய வந்தால் அப்பா திட்டுவார் என பயந்து செவ் வாயன்று இரவு வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு தூங்கியுள்ளார். இதனையடுத்து அதிகாலையில் எழுந்த பெற்றோர் சூரியபிரகாஷ் வாந்தி எடுத்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந் தனர். தொடர்ந்து அவரை ஆத்தூர் தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும தித்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் மாண வன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை அறிந்து, ஆத்தூர் ஊரக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் மாணவனிடம் விசா ரணை மேற்கொண்டனர். அதில், சூரிய பிர காஷ் ஆன்லைன் ரம்மி விளையாடி 75 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்ததால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என பயந்து விஷமருந்தி தற் கொலைக்கு முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலை யிலிருந்த மானவனை காவல் துறையின் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆன் லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கல் லூரி மாணவன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளப்பெருக்கு - ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தில் பயணிக்கும் பொதுமக்கள் 

தருமபுரி, செப்.7- தருமபுரி சனக்குமார் நதியில் வெள்ளப்பெருக்கின் போது  ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தில் பொதுமக்கள் பய ணித்து வருகின்றனர்.  தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த  சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலை யில், கனமழை காரணமாக தருமபுரி கம்பைநல்லூர் வழியே  பாயும் சனக்குமார் நதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கெலவள்ளி கிராமம் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் வாகனங்கள் அந்த வழியே செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்ச ரித்து வருகின்றனர். ஆனால் எச்சரிக்கையையும் மீறி ஒரு சில  வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் மூழ்கியுள்ள தரைப் பாலத்தின் மீது பயணிக்கின்றனர்.

ரூ. 7 கோடி மதிப்பிலான  மதுபான விவகாரம்  டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்

கோவை, செப். 7 -  டாஸ்மாக் விற்பனையில் கோவை மாவட்டத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் ரூ.7 கோடி மதிப்பிலான மதுவகைகள் மாயமானது குறித்து  தீக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதுகுறித்து டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அளித்துள்ள விளக்கத்தில்  கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனை சரிந்து வருவது குறித்து  செப்டம்பர் 6 அன்று  ஆய்வு செய்யப்பட்டது. அதில், கடையின்  அமைவிடம், கனமழை, அருகில் புதிய கடை, கடை பணி யாளர்களின் வாடிக்கையாளர் அணுகு முறை உள்ளிட்ட காரணிகள் உள்ளடக்கியதாகும். அது குறித்த ஆய்வே நடை பெற்றது. மேலும், ரூ. 7 கோடி மதிப்பிலான மதுவகைகள்  மாய மாகவில்லை எனவும் முதுநிலை மண்டல மேலாளர் கோவிந்தராஜூலு தெரிவித்துள்ளார்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்

திருப்பூர், செப்.7- குன்னத்தூரில் ரூ.3.75 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட  ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத் தார்.  திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரில் நடைபெற்ற  இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியரின் வினீத் முன்னிலை  வகித்தார். காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநா தன் பங்கேற்று பேசியதாவது: தமிழக முதல்வரால் திறக் கப்பட்டுள்ள இந்த விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் தங்க ளுடைய விளை பொருள்களை இடைத்தரகர்களின் குறுக்கீடு  இன்றி நியாயமான விலைக்கு விற்று பயன் பெறலாம்.  விலை வீழ்ச்சி காலங்களில் விளை பொருள்களை கிடங்கில் இருப்புவைத்து பொருளீட்டு கடன் பெறலாம். திருப்பூர் மாவட் டத்தில் உள்ள 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் குன் னத்தூர், தாராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மட் டுமே வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தன. தற்போது  குன்னத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு சொந்த  கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் சேமிப்பு கிடங்கு,  பரிவர்த்தனை கூடம், உலா்களம், அலுவலக கட்டடம், சுகா தார வசதி, சுற்றுச்சுவர் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள்  ஏற்படுத்தப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத் துள்ளார், என்றார். இதைத்தொடர்ந்து, 2 பயனாளிகளுக்கு ரூ.2  ஆயிரம் மானிய விலையில் மின்கல தெளிப்பான்கள், ரூ. 6  ஆயிரம் மதிப்பில் விதை, உரங்கள் உள்ளிட்டவைகளை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் மகாதேவன், வேளாண் இணை இயக்குநர் சின்னச் சாமி, வேளாண்மை துணை இயக்குநர் சண்முக சுந்தரம்,  திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலைச் செயலாளர் பாலசந் திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சூரிய சக்தியில் இயங்கும் மின்வேலி  அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு

சூரிய சக்தியில் இயங்கும் மின்வேலி  அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு திருப்பூர், செப். 7 - திருப்பூர்  மாவட்டத்தில்  சூரிய சக்தியால் இயங்கும்  சூரிய  ஒளி  மின்வேலி அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில்  தனிநபர்  விவசாயிகளுக்கு சூரிய சக்தியால்  இயங்கும் சூரிய ஒளி மின்வேலியை ரூ.3 கோடி மானியத்து டன் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம்  2022-23ஆம் நிதி யாண்டில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்ப டுத்தப்படுகிறது.  சூரிய ஒளி மின்வேலி அமைப்பு, சூரிய ஒளி மின் தகடுகள்  மூலம்  கிடைக்கும் மின்சாரத்தினால் இயங்க கூடியது. சூரிய  ஒளி மின்வேலி அமைப்பதனால்  விலங்குகள், வேட்டைக்கா ரர்கள் மற்றும் அந்நியர்களுக்கு மின் வேலியில் செலுத்தப்ப டும் உயர்மின் அழுத்தத்துடன் கூடிய  குறுகிய  உந்து விசை மின்  அதிர்ச்சி ஏற்படுத்தும். இதனால் விளைபொருட்களின் உற் பத்தி பாதிக்கப்படாமல் விவசாயிகள் பயனடையலாம். ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 2 ஹெக்டேர் பரப்பு அல்லது  566 மீட்டர் சூரிய மின் வேலி அமைக்க மானியம் வழங்கப்ப டும். சூரிய மின்வேலி அமைப்பதற்கான செலவு தொகையில்   40 சதவிகிதம் 5 வரிசைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க (566 மீட்டருக்கு) உண்டான செலவுத் தொகை ரூ.2  லட்சத்து 8 ஆயிரத்து 296 வீதம் 7 வரிசைகள் கொண்ட மின்வேலி அமைக்க (566 மீட்டருக்கு) உண்டான செலவுத்  தொகை ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 263 வீதம் 10 வரிசைகள்  கொண்ட மின்வேலி அமைக்க (566 மீட்டருக்கு) உண் டான செலவுத்தொகை  ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 879 வீதம்  விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு தெரிவு செய்து கொள்ளலாம்.  எனவே இந்த திட்டத்தில் பயன்பெற, விவசாயிகள், உதவி  செயற்பொறியாளர் (வே.பொ), யசோதா ராமலிங்கம் லே அவுட், (கைபேசி எண்: 9865497731) அலுவலகத்தில் விண்ணப் பித்து பயனடையலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

திருப்பூர், செப். 7 - மாதாந்திர ஓய்வூதியம் பெறக்கூடிய அரசுத்துறை  ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தங்களது மின்னணு வாழ் நாள் சான்றினை சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்  கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள்  ஆண்டு நேர்காணல் செய்வதற்கு உண்டான கால அளவு அர சாணை நிலை எண். 136 நிதி(ஓய்வூதியம்) துறை நாள்: மே  20இன் படி அறிவிக்கப்பட்டது. இதன்படி ஜூலை 1 ஆம் தேதி  முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஆகும். திருப்பூர் மாவட்ட  கருவூல அலகில் (சார்நிலைக் கருவூல அலுவலகங்கள் உட் பட) இதுவரை 2ஆயிரத்து 508 ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்கா ணலுக்கு வராமல் உள்ளனர். ஆண்டு நேர்காணல் புரிவதற்கு உண்டான காலக்கெடு  முடிவதற்கு குறைவான நாட்களே உள்ளதால், தங்களது  ஓய்வூதியத்தை தொடர்ச்சியாக பெறுவதற்கு, இந்நாள்  வரை ஆண்டு நேர்காணல் புரியாமல் உள்ள ஓய்வூதியர்கள்  உடனடியாக தங்களது மின்னுண வாழ்நாள் சான்றினை  சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மின்னணு வாழ்நாள் சான்றினை ஜீவன் பிரமான் இணைய தளம் வாயிலாக இந்திய தபால் துறை வங்கி, இசேவை மற்றும்  பொது சேவை மையங்கள் (சேவை கட்டணம் உண்டு) மூலம்  சமர்ப்பிக்கலாம். மேலும் கருவூலத்திற்கு நேரில் சென் றும் நேர் காணல் புரியலாம். மின்னணு வாழ்நாள் சான்று  சமர்ப்பிக்க அளிக்க வேண்டிய விவரங்கள்:  ஆதார் எண்,  பிபிஓ  எண், வங்கி கணக்கு எண் மற்றும் கைபேசி ஓடிபி அளிக்க  வேண்டும் என கருவூல அலுவலர் கூறியுள்ளார்.

வாலிபர் தற்கொலை

திருப்பூர், செப்.7- பல்லடம் அருகே உள்ள சாமிகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் நாகராஜ்(30). கடந்த  சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 5 ஆம் தேதி இரவு வீட்டில் யாரும் இல் லாத நேரத்தில் அவர் விஷம்  குடித்து மயங்கி கிடந்ததாக  கூறப்படுகிறது. இதைய டுத்து அவரது தாயார் மயி லாத்தாள், அக்கம் பக்கம்  உள்ளவர்கள் அவரை மீட்டு  திருப்பூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்த னர். அங்கு சிகிச்சை பெற்று  வந்த நிலையில் 6ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இதுகு றித்து பல்லடம் காவல்துறை யினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.