அனைத்து பழங்குடி குடியிருப்புகளுக்கும் சாலை வசதி
மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள குரு மலை பழங்குடி மக்கள் குடியிருப்புக்கு மட்டுமின்றி இதுபோன்ற தேவை உள்ள அனைத்து பழங்குடி மக்கள் குடியிருப்புகளுக்கும் ஆம்புலன்ஸ் வாக னம் வந்து செல்லக்கூடிய முறையில் சாலை வசதி ஏற்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தெரிவித்தார். சாலை வசதி இல்லாமல் தொட்டிலில் தூக்கிச் செல்லப்பட்ட நோயாளி, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பழனிச்சாமி உயிரிழந்தது குறித்து புத னன்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜிடம் நிரு பர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் கூறிய ஆட்சி யர் கிறிஸ்து ராஜ், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பழனிச்சாமி உயிரிழந்திருக்கிறார். கடந்த வாரம் தான் அப்பகுதி மக்கள் சாலை வசதி கோரி இங்கு வந்திருந்தனர். பல ஆண்டுகளாக நீடித்த அந்த கோரிக்கை நிறைவேற்ற உடனடியாக மாவட்ட வன உரிமைக் குழுக் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தற்போது தளி பேரூராட்சி செயல் அலுவலர் குருமலை சாலை அமைப்பதற்கான டெண்டர் கோரும் நடைமுறையைத் தொடங்கி யுள்ளார். இரண்டு, மூன்று மாதங்களில் அங்கு சாலை அமைக்கப்பட்டு விடும். அப்போது இது போன்ற உயிரிழப்பு சம்பவங்கள் தவிர்க்கப்படும். ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வரக்கூடிய நிலை ஏற்படும். அது மட்டுமின்றி, அங்குள்ள பழங்குடியினரின் அனைத்து குடியிருப்புகளிலும் இது போல் ஆபத்து சூழலில் தேவை இருக்கும் இடங்களில் சாலை அமைப்பது குறித்து பட்டியல் எடுத்து ஒரு வாரத்திற்குள் கோட்ட அளவிலான வன உரிமைக் குழுக் கூட்டத்தை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி விரைந்து மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பவும் கூறி யிருக்கிறோம். அங்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வரக்கூடிய அளவுக்கு சாலை வசதி ஏற்ப டுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் கூறினார்.
திருப்பூர், ஜூலை 19 - உடுமலை அருகே பழங்குடி மக்கள் குடியிருக்கும் குருமலை யில் இருந்து சாலை வசதி இல் லாததால் தொட்டிலில் தூக்கி வரப் பட்ட நோயாளி பழனிச்சாமி உடு மலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக் காமல் பரிதாபமாக உயிரிழந்தார். சாலை வசதி இல்லாததால் மீண் டும் குருமலைக்கு அவரது உடலை கொண்டு செல்ல முடியாமல் மலை அடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி மலை பகுதியிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், மேற்குத்தொடர்ச்சி மலை யில் 15 சிறு கிராமங்களில் (செட்டில் மெண்ட்) பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒன்று குரு மலை. இங்கிருந்து ஆபத்து, அவச ரத் தேவைக்கு சமவெளிப் பகுதிக்கு வருவதற்கு சரியான பாதை வசதி இல்லை. இந்நிலையில் குருமலை யைச் சேர்ந்த பழனிச்சாமி (37) என் பவருக்கு உடல்நிலை சரியில்லா மல் பாதிக்கப்பட்டார். எனவே செவ் வாயன்று அவரை தொட்டில் கட்டி நான்கைந்து பேர் சேர்ந்து கரடு, முரடான மலைப் பாதை வழியாக சுமார் 6 கிலோமீட்டர் தூரம் தூக்கிக் கொண்டு, மலை அடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி மலைக்கு வந்த னர். அங்கிருந்து வாகனம் மூலம் பழ னிச்சாமி உடுமலை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டு உள்நோயாளியாக அனுமதிக் கப்பட்டார். எனினும் மருத்துவம னையில் சிகிச்சை பலனின்றி செவ் வாயான்று இரவு பழனிச்சாமி பரி தாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த பழனிச்சாமிக்கு மாரி யப்பன் (15) என்ற மகன் இருக்கி றார். அவர் இறந்த தகவல் குரு மலையில் உள்ள அவரது உறவி னர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது உடலை குரும லைக்கு கொண்டு வர முடியாத நிலையில், திருமூர்த்தி மலை பகு தியிலேயே அடக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. எனவே குரு மலை சிறுகிராமத்தைச் சேர்ந்த அவ ரது உறவினர்கள், பெண்கள் மலைப் பாதையில் நடந்தே திருமூர்த்தி மலைக்கு வந்து அவரது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கர்ப்பிணிகள் பிரசவம், உயிர்க் காக் கும் சிகிச்சைகள் தேவை உள்பட இது போன்ற துயர நிகழ்வுகள் நடை பெறக்கூடாது என்பதற்குத்தான் சாலை வசதி கோரி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தினர் கடந்த வாரம் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் போராட்டத்தை நடத்தினர். அதில் மாவட்ட நிர்வாகமும் கோரிக் கையை ஏற்று சாலை அமைக்க உறு தியளித்து இருந்தது. இந்த நிலை யில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருப்பது அப்பகு தியில் சோகத்தை ஏற்படுத்தி உள் ளது. மாவட்ட நிர்வாகம் ஒப்புக் கொண்டபடி விரைந்து சாலை ஏற் படுத்திக் கொடுக்க வேண்டும் என் றும் அங்குள்ள மக்கள் எதிர்பார்க் கின்றனர்.