கோவையில் இன்று நடைபெற்ற கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் வழங்கியது மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் அமைந்தது.
கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ராஜா வீதியில் துவங்கிய தேர் வீதி உலா ஒப்பணகாரர் வீதி வழியாக வைசியால் வீதி, கருப்பகவுண்டர் வீதி சென்று மீண்டும் தேர் திடலை அடைத்தது. தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கோனியம்மன் தேரானது பாரம்பரியமிக்க கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் வழியாக சென்ற போது பள்ளிவாசல் சார்பாக திருவிழாவுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு சுமார் 5,000 தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. பல வருடங்களாக கோனியம்மன் தேர் திருவிழாவிற்கு வருகை தரக்கூடிய இந்து பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் தண்ணீர் பாட்டிலை வழங்கி வருகின்றனர்.
இதில் கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் தலைவர் ஆசிரியர் அமானுல்லா. செயலாளர் பேராசிரியர் டாக்டர்.பீர் முகமது, முத்தவள்ளி ஜாஃபர் அலி. பொருளாளர் பக்கீர் முகமது உள்ளிட்டோர் மகா சபையாளர்கள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்கினர்.