districts

img

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச.13-  திருவாரூரில் இந்திய மாணவர் சங்கத்தினர், குடி யுரிமை சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் இரா.ஹரிசுர்ஜித் தலைமையில் இப்போராட்டம் நடை பெற்றது. மாவட்ட துணைத்  தலைவர் எம்.கவிதா, நிர்வா கிகள் தீனா, மணி, பி.சுர்ஜித் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நன்னிலம்

நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரியில் நடை பெற்ற போராட்டத்தில் கல்லூரி செயலாளர் தீபன் ராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநில துணைச் செயலா ளர் ஆறு.பிரகாஷ் உரை யாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் பா. மதன்பாலா மற்றும் பிரி யங்கா, சினேகா, மரியா, சஞ்சய், கிரி, அஜய், அபிநாஷ் உட்பட ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

கும்பகோணம் 

திமுக தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞரணி அமை ப்பாளர் குட்டி தட்சிணா மூர்த்தி மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தில் குமார் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் இளைஞர் அணி, மாணவர் அணி நிர்வாகி கள் மாவட்ட கழக அலுவல கத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கும்பகோணம் ராமசாமி கோயில் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆர்ப்பாட்டம் செய்த 50-க்கும் மேற்பட்ட தொண்டர்களை  காவல்துறை கைது செய்தனர்.