தாராபுரம், செப். 17 – தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு முற்போக்கு அமைப்புகள் உறுதிமொழி ஏற்று எழுச்சியுடன் கடைப்பிடித்தனர். தாராபுரத்தில் தந்தை பெரியா ரின் 144 ஆவது பிறந்த நாளை முன் னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலை வர் மனுவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. தாராபுரம் கிளை செயலாளர் ஆ.மணியன் பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தார். பின்னர் உறுதிமொழி ஏற்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வா கிகள் நடராஜன், சீரங்கராயன், மேக வர்ணன், பாரதி, அரசஇனியன், கண் ணுசாமி மற்றும் சிபிஎம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.
திருப்பூர்
திருப்பூர் மாநகரில் ரயில் நிலை யம் முன்பாக அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. ஆர்.கணேசன், மாவட்டச் செயலா ளர் ஆர்.குமார், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட் டத் தலைவர் ச.நந்தகோபால், மாவட் டச் செயலாளர் சி.கே.கனகராஜ் உள்பட இரு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், ஊழியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். இங்கு தமிழக அரசின் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப் பட்டது. இதில் திருப்பூர் தெற்கு எம். எல்.ஏ., க.செல்வராஜ் உறுதிமொ ழியை வாசிக்க, அமைச்சர்கள் சாமி நாதன், கயல்விழி செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார் உள்பட கூடியிருந்த வர்கள் உறுதிமொழி ஏற்றனர். பல்வேறு பெரியாரிய அமைப்பி னரும் அங்கு வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.
அவிநாசி
அவினாசி ஒன்றியம் செம்பிய நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட செல்வபு ரம் பகுதியில் அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தந்தை பெரியார் படம் வைத்து, மாலை அணிவித்து மலர் தூவி மரி யாதை செலுத்தினர். இதில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய நிர்வாகி வி.பி.முருகேஷ், மாறன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். இந்திய மாணவர் சங்கத்தினர் அவிநாசி அரசு கலைக்கல்லூரியில் முன்பாக பெரியார் படம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட தலைவர் பிரவீன், துணைச் செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.