கோவை, ஜூன் 14- ரயில்வே துறையை தனியா ரிடம் ஒப்படைக்கும் விதமாக கோவை – சீரடி தனியார் ரயில் இயக்கத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் டிஆர்இயு மற்றும் சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையிலிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூரு வழி யாக சீரடிக்கு செல்லும் பாரத் கவுரவ் என்ற தனியார் சேவை ரயில் செவ்வாயன்று இயக்கப் பட்டது. இந்த ரயிலை இயக்க தனி யாருக்கு ஒன்றிய மோடி அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர் இயு) மற்றும் சிஐடியு சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்று வருகிறது. கோவை ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி டிஆர்இயு செயல் தலைவர் ஏ.ஜானகிராமன், பொது செயலாளர் வி.ஹரிலால் மற்றும் ஆர். இளங்கோவன், சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் யு.கே.சிவஞா னம் உள்ளிட்டோர் உரையாற்றி னர்.
சேலம்
இதேபோன்று சேலம் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டிஆர்இயு சங்க கோட்ட செயலாளர் அல்லி முத்து தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாநில குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்க டபதி, வீ.இளங்கோ, ஏ.கோவிந் தன், ஆர்.வைரமணி, சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் நேதாஜி, அஞ்சலக ஓய்வூதிய சங்கத்தின் தலைவர் கே.ஆர்.கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பட்டத்தில் தலைவர்கள் பேசுகையில், கோவையில் இருந்து சீரடி செல்வ தற்கு குறைந்தபட்ச ரயில் கட்ட ணம் ரூ.1,280 முதல் அதிகபட்ச கட்டணம் ரூ.8 ஆயிரத்து 190 ஆகும். ஆனால், தனியார் மய மாக்கப்பட்ட இந்த ரயிலில் குறைந் தபட்ச கட்டணம் ரூ.2 ஆயிரத்து 500 முதல் அதிகபட்ச கட்டணம் ரூ.10 ஆயிரம் வரை உள்ளது. தனி யார் இயக்குவதால் கூடுதல் கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது. இந்திய பொதுத்துறை நிறுவன மான ரயில்வே துறை பொது மக்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தது. இந்த சேவை இனி பெரு முதலாளிகளின் லாபம் ஈட்டும் துறையாக மாற்றப்படும். இதனால் மக்களுக்கான சேவை பாதிக்கப்படும். ஒன்றிய மோடி அரசு கோவை, சீரடி ரயிலை தெற்கு ரயில்வே நிர்வாகமே இயக்க வேண்டும் என்றனர். முன்னதாக கோவை, சேலம் பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடு
இதேபோன்று ஈரோடு ரயில் நிலையத்தின் முன்பு தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம் மற்றும் ஏ.எல்.ஆர்.எஸ்.ஏ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தெற்கு ரயில்வே சங்க மண்டல துணை பொதுச்செயலாளர் பிஜூ தலைமை தாங்கினார். போராட் டத்தை வாழ்த்தி மத்திய அரசு ஊழியர் இணைப்புக் குழு செய லாளர் என்.ராமசாமி, ஓய்வூதி யர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட தலைவர் என். மணிபா ரதி, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் என். குப்புசாமி, அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்க தலைவர் வி. ராஜகோபால், ஏ.எல்.எஸ்.ஏ கோட்ட செயல் தலைவர் பிர காஷ், தெற்கு ரயில்வே ஊழியர் சங்க கோட்ட தலைவர் எம்.முருகே சன் ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். தெற்கு ரயில்வே ஊழியர் சங்க உதவி கோட்டச் செயலர் அன்பரசு நன்றி கூறினார். ஆர்ப் பாட்டத்திற்கு நூற்றுக்கும் மேற் பட்ட ஊழியர்கள் கலந்து கொண்ட னர்.