districts

img

பவானி ஆற்றில் தென்பட்ட நீர் நாய்கள்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பவானியாற்றில் அழிந்து வரும் உயிரினமாக கருதப்படும் நீர் நாய்கள் தென்பட்டது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மீன்களை விரும்பி உணவாக உண்ணுகின்ற நன்னீர் விலங்கான நீர் நாய்கள் ஒரு காலத்தில் காவிரி கரையோரம் அதிக அளவில் வாழ்ந்து வந்தன.நீர் நிலைகளில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கையை குறைப்பதில் பெரும் பங்களிப்பை கொண்டு, உணவு சங்கிலியில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தன இந்த நீர் நாய்கள் இனங்கள்.ஆனால், நீர் நிலைகள் பல்வேறு கழிவுகள் கலப்பால் மாசடைதல் மற்றும் மனித செயல்பாடுகளின் தாக்கத்தால் நீர் நாய்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில்,  கோவை திருப்பூர் நீலகிரி மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் பவானி ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.இந்நிலையில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படும் சாமண்ணா நீரூந்து நிலையத்தின் அருகே  பவானி ஆற்று கரைகளில் இன்று நீர் நாய்கள் தென்பட்டன.

அழிந்து வரும் நீர்வாழ் உயிரினங்களில் ஒன்றான இந்த நீர் நாய்கள் பவானி ஆற்றில் தென்படுவது மிக மிக அரிதானது.புதிதாக தென்பட்ட 10 நீர் நாய்களை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.