கோவை, ஏப்.8– தேசிய சமரச தினத்தை யொட்டி கோவை மாவட்ட சமரச தீர்வு மையத்தின் சார்பில், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விழிப்பு ணர்வு நிகழ்ச்சி வெள்ளி யன்று நடைபெற்றது. சென்னை உயர்நீதி மன்ற சமரச தீர்வு மைய வழி காட்டுதல்படி, கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் சார்பில் ஏப்.9 ஆம் தேதி தேசிய சமரச தினமாக அனுசரிக்கப்படு கிறது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ஏப்.8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், வெள்ளியன்று கோவை மாவட்ட நீதி மன்ற வளாகத்திலும் மற்றும் அதன் சுற்று பகுதிகளில், தேசிய சமரச தினம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் துண்டுப் பிரச்சாரங்கள் வழங்கி துவங்கப்பட்டது. மேலும், சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு சமரச மையத்தின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி விளக்கும் விழிப்பு ணர்வு வகுப்புகள் மற்றும் விழிப்புணர்வு நாட கம் போன்றவை கோவை நீதிமன்ற வளாகத் தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாண வர்கள் திரளாக பங்கேற்றனர்.