மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
சென்னை, ஜன. 10- அரசுப் பள்ளிகளை வலுப்ப டுத்த தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு மாணவர் பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கத்தின் தலைவர் செ.அருமைநாதன், பொதுச் செயலாளர் வீரபெரு மாள், பொருளாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சிஜிதாமஸ் வைத் யனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
அரசுப்பள்ளிகளை வலுப்ப டுத்தவும், மேம்படுத்தவும், தமி ழக அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, வருடா வருடம் குறைந்து கொண்டே வருகிறது. போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாததால், பல பள்ளிகளை மூடப்போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தனியார் பள்ளிகளில் மாண வர் சேர்க்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனியார் லாப நோக்கில் நடத்துவதால், பல வியாபார யுக்திகளை கையாண்டு அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் சிறந்தது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். அரசுப்பள்ளிகளை வலுப்ப டுத்த நடவடிக்கைகள் மேற் கொண்டு வரும் அதே சமயத்தில், அரசு, தனியார் பள்ளிகள் துவங்க, தாராளமாக அனுமதி யும் வழங்கி வருகிறது. அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த, தனி யார் பள்ளிகளின் எண்ணிக் கையை கட்டுப்படுத் துவது அவசி யமாகிறது. புதிதாக தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் என்ற செயல்பாட்டை அதிக ரிக்க, ஆசிரியர்களுக்கு சீருடை, சைக்கிள், கணினி போன்றவை களை எடுத்து வருதல், வீடு களுக்கு சென்று புள்ளி விவ ரங்கள் சேகரித்தல் போன்ற கற்பித்தல் அல்லாத பணிகள் வழங்குவதை தவிர்ப்பது அவ சியமாகிறது. ஆகவே கற்பித்தல் அல்லாத பணிகளை மேற் கொள்ள, இதற்கென தேவைப் படும் விதத்தில், தனியாக பணி யாளர்களை நியமிக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர் போன்ற அலுவலர்கள், அதிக மான நிர்வாகப் பணிகளை மேற் கொள்ள வேண்டியிருப்பதால், பள்ளிகளுக்கு அடிக்கடி சென்று, அங்கு கற்றல் கற்பித்தல் போன்ற செயல்பாடுகளை மேற்பார்வை யிட்டு, அவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலவில்லை. ஆகவே, நிர்வா கப்பணிகளை மேற்கொள்வ தற்கென்று. தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும். தற்போதைய மாணவர்களின், மாறுபட்ட மனநிலையை கருத் தில் கொண்டு அவர்களை கையாளும் திறமையை மேம்படுத்தும் விதமாக ஆசிரி யர்கள் நியமனத்திற்கு முன்பும், ஏற்கனவே பணி செய்யும் ஆசிரி யர்களுக்கும் போதிய அளவு, உளவியல் பயிற்சி அளிப்ப தற்கும், மாணவர்கள் பிரச்சனை களுக்கு உடனுக்குடன் உளவியல் ஆலோசனை வழங்குவதற்கும். பள்ளியில் போதிய அளவு, உள வியல் ஆலோசகர்களை நியம னம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.