districts

வங்கிகளுக்கு ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைவு

புதுதில்லி,ஜூன் 6 - வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்கூட்டம் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரெப்போவட்டி விகிதம் 0.25 சதவீதம் அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.  இதன்படி ரெப்போ வட்டி விகிதம்6 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.  ரிவர்ஸ்ரெப்போ வட்டி விகிதம் 5 புள்ளி 5 சதவீதமாக உள்ளது. மொத்த உள்நாட்டுஉற்பத்தி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.பணவீக்க விகிதம் நிதியாண்டின் முதல் பாதியில் 3 சதவீதத்தில் இருந்து3. 1 சதவீதமாகவும், இரண்டாவது பாதியில் 3.4 சதவீதத்தில் இருந்து 3.7 சதவீதமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.மேலும், இணைய வழிப் பணப்பரிமாற்ற முறைகளான சுகூழுளு, சூநுகுகூ ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்களைநீக்கியுள்ள ரிசர்வ் வங்கி, இதன் பலனைவங்கிகள் கடைநிலை நுகர்வோருக்கு சேர்க்க அறிவுறுத்தியுள்ளது.2 லட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தைவங்கி அலுவல் நேரங்களில் இணையதளம் மூலம் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்ற சுகூழுளு முறை பயன்படுத்தப்படுகிறது. முன்னதாக வங்கி வேலை நாட்களில்மாலை 4.30 மணி வரை ஆர்டிஜிஎஸ் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாலை ஆறு மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஏ.டி.எம். கட்டணங்களை வரைமுறைப்படுத்த வங்கிகளின் தலைமைச் செயலதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைக்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் இக்குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் ஏ.டி.எம் கட்டணங்களையும் ரிசர்வ் வங்கி வரைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.