வால்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவரும், பயத்தில் ஓடிய மூவரும் காயமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறையில் செவ்வாயன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் மானாம்பள்ளி வனச்சரக எல்லைக்குட்பட்ட தனியார் எஸ்டேட் பகுதியில் காட்டு யானை குடியிருப்புக்கு அருகில் வரும் சத்தம் கேட்டு சரோஜினி (52) என்பவர் வீட்டின் கதவை திறந்து வெளியில் வரும்பொழுது காட்டு யானை தாக்கி கீழே விழுந்ததில் முகத்தில் சிராய்பு காயங்களும் வலது கணுக்காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.
மேலும், அங்கு கூடியிருந்த தொழிலாளர்கள் மிரண்டு ஓடும்போது தவறி விழுந்து உதயகுமார் (32), சந்திரன் (62), கார்த்தீஸ்வரி (40) ஆகியோருக்கும் சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே காயம் அடைந்த நபர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், சம்பவ இடத்தில் மனித விலங்கு மோதல் தடுப்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.