districts

img

கோவை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

கோவை, செப்.12- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாநகராட்சி  அலுவலகத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை உடன டியாக அமல்படுத்த வேண்டும். மாநகரம் முழுவதும் சாலைகள், மழைநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும். குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும். வீடுகளில் தின சரி குப்பை சேகரிப்பை உறுதி  செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் வியாழனன்று காலை கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற் றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். கட்சியின் மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன் தலைமை யில் நடைபெற்ற இப்போராட்டத் தில், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, யு.கே.சிவஞானம், கே.அஜய்கு மார், என்.ஆர்.முருகேசன், கே. மனோகரன், சிபிஎம் கோவை மாநக ராட்சி மாமன்றக்குழுத் தலைவர் வி. இராமமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் கள் ஆர்.பூபதி, கண்ணகி ஜோதி பாசு, சுமதி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். இதன்பின் அனைவரையும் காவல் துறையி னர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவ ரும் மாலையில் விடுவிக்கப்பட் டதைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி அலுவலகத்தில், ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன்  மற்றும் மாநகராட்சி அதிகாரிகளு டன், கட்சியின் தலைவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப் போது, கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதி அளித்தார்.