districts

img

திருமூர்த்தி அணை படகு சவாரி: மகளிர் சுய உதவிக்குழு மூலம் நடத்த வலியுறுத்தல்

உடுமலை, டிச.24- திருமூர்த்தி அணையில் மீண்டும் துவங்கப்  படவுள்ள படகு சவாரியை மகளிர் சுய உதவிக்  குழு மூலமோ அல்லது மலைவாழ் மக்கள்  மூலம் மட்டுமே நடத்த வேண்டும். தனியார்  மூலம் நடத்த கூடாது என கோரிக்கை எழுந் துள்ளது. உடுமலையில் இருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமூர்த்தி  மலைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பய ணிகள் வந்து செல்கின்றனர். திருமூர்த்தி மலையின் மேல் செயற்கையாக உருவாக்கப் பட்ட பஞ்சலிங்க அருவி, மலையின் அடிவா ரப் பகுதியில் அமணலிங்கேஸ்வரர் கோவில்,  அங்கு இருந்து ஒரு கிலோமீட்டர் தொலை வில் அணையின் கரைப்பகுதியில் சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் என அனைவரையும் கவ ரும் வகையில் சுற்றுலாத் தலமாக உருவாக் கப்பட்டது. மேலும், தளி பேரூராட்சி நிர்வாகம்  சார்பில் 1980 ஆம் ஆண்டு படகு சவாரியும்  துவக்கப்பட்டது. பின்னர் 2002 ஆம் ஆண்டு  அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு  மூலம் படகு சவாரியை இயக்க பெரிய படகு 3,  சிறிய படகு 2 வழங்கப்பட்டது. மேலும், படகு  சவாரியின் மூலம் கிடைக்கும் வருவாயில் 25  சதவீதம் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், 75 சதவீதம் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு என  பகிர்ந்து கொள்ளப்படும் என்ற நிபந்தனை யின் படி மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக படகு சவாரி இல்லாமல் உள்ளது. இந்நிலையில், திருமூர்த்தி அணையில்  மீண்டும் படகு சவாரி தொடங்கப்படும். அதற் காக 9 படகுகள், 40 லைஃப் ஜாக்கெட்டுகள் வாங்க ஏலம் விடப்பட்டுள்ளது என சனியன்று  ஆய்வு மேற்கொண்ட மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் அரவிந்த்குமார் தெரிவித் துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்ட  போது, ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த படகு சவாரி, தற்பொழுது பழுத டைந்த படகுகளுடன் காட்சி பொருளாக உள்ளது. படகுகள் அனைத்தும் வீணாக போனது. இதை சரி செய்ய பேரூராட்சி நிர்வா கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.  இந்நிலையில், தனியார் படகு சவாரி திட் டத்தை தொடங்க உள்ளதாக தெரிகிறது. இதை அனுமதிக்க கூடாது. முன்புபோலவே மகளிர் சுய உதவிக்குழு மூலமாகவோ அல் லது மலைவாழ் மக்கள் மூலம் தான் படகு சவாரி நடத்த வேண்டும். அப்போது தான் இப்பகுதி  ஏழை, எளிய பெண்கள் மற்றும் மலை வாழ்  மக்கள் பயனடைவார்கள். தனியார் நிறுவ னம் மூலம் நடத்தினால், இப்பகுதி மக்க ளுக்கு எந்த பயனும் கிடைக்காது என்ற னர்.