புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும், சுற்றுச்சூழல் தாக்கம் சட்ட வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக.7) திருவள்ளூர் உழவர் சந்தை அருகில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.மதன், மாவட்ட செயலாளர் எஸ். தேவேந்திரன், பொருளாளர் எஸ். கலையரசன் உள்ளிட்டோர் பேசினர்.