அவிநாசி, ஜூலை 26– குன்னத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் முதல் முறையாக நகைக்கடை உரிமையாளருக்கு கொரோனா தொற்று வெள்ளியன்று உறுதி செய்யப்பட்டதால் பொது மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், குன்னத் தூர் கோபி சாலையில் உள்ள பிரபல நகைக்கடை உரிமை யாளரான 70 வயது மதிக்கத்தக்க ஆணுக்கு தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரி சோதனையில் தொற்று இருப்பது வெள்ளியன்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் கோவையிலுள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளார்.
இதையடுத்து சுகாதாரத் துறையினர், பேரூராட்சி பணி யாளர்கள் உள்ளிட்டோர் அவர் வசித்து பகுதியில் கிருமி நாசினி தெளித்து நோய்த் தடுப்புப் பணிகளைத் தீவிரப் படுத்தியுள்ளனர். மேலும் நகைக்கடை உரிமையாளர் வீடு உள்ள பகுதி, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட் டோருக்கு சுகாதாரத் துறையினர் பரிசோதனை மேற் கொள்ளவுள்ளனர்.
இதுவரையிலும் குன்னத்தூர் பேரூ ராட்சி பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப் படாத நிலையில், தற்போது முதல் முறையாக தொற்று உறுதி செய்யப்பட்டது, அப்பகுதிப் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.