கோவை, ஜன.1– கஞ்சா விற்று திருந்தியவர் மீது வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டி ரூ.1 லட்சம் லஞ் சம் பெற்ற பெண் காவல் ஆய்வாளர் உள் ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், ஈரோடு மாவட்டம் பவா னியை சேர்ந்தவர் விஜயகுமார். கஞ்சா வியா பாரியான இவர் தற்போது திருந்தி கட்டிட மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரு கிறார். இந்நிலையில், அண்மையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், விஜயகுமாரை தொடர்பு கொண்டு உன் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யாமல் இருக்க எங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். அதற்கு அவர், தான் கஞ்சா விற்பனை செய் வதை நிறுத்தி விட்டதாகவும், தற்போது கட்டிட வேலைக்கு செல்வதாக கூறியுள் ளார். ஆனால், அவரை விடாமல் லஞ்சம் கேட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மிரட்டியுள்ளனர். இதையடுத்து வேறு வழியின்றி விஜய குமார் புதனன்று கோவை கணபதியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சரோஜினி மற்றும் ஏட்டு ஆகியோரிடம் ரூபாய் 30 ஆயிரம் லஞ்ச மாக கொடுத்துள்ளார். இதன்பின்னர் மீதி 70 ஆயிரம் கொடுக்க பணம் இல்லை என்ற தும், அவரின் மனைவியின் நகைகளை விற்று பணம் தருமாறு மிரட்டியுள்ளனர். ஆனால், நகையை தர மறுத்து விஜயகுமார், லஞ்ச ஒழிப்பு போலீசிலில் புகார் அளித் தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.70 ஆயிரத்தை விஜய குமாரிடம் கொடுத்து காவல் ஆய்வாளர் சரோஜினி, ஏட்டு ராமசாமி ஆகியோரிடம் வழங்க கூறினர். இதன்பின் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் பெற்ற இரு வரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதன் பிறகு நடத்திய விசார ணையில் அவர்களிடம் கணக்கில் வராத ரூ.67 ஆயிரத்து 100 ரொக்கப் பணம் பறி முதல் செய்யப்பட்டது.