districts

img

800 டன் சீமை கருவேல மரங்கள் அகற்றம்

மேட்டுப்பாளையம், மே 25- காடுகளை பாழ்படுத்தும் சீமை கரு வேல மரங்களை வேரோடு வெட்டி அகற்றுவது என்கிற அடிப்படையில், சிறுமுறை வனச்சரக பகுதியில் வனத் துறையினர் 800 டன் சீமை கருவேல மரங்கள் வேரோடு வெட்டி அகற்றி னர்.  கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச் சரக பகுதி உள்ளது. இங்கு காடுகளை  பாதிக்கும் வகையில் வனத்தினுள் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங் களை அடியோடு வெட்டி அகற்றும் பணி யில் சிறுமுகை வனத்துறையினர் ஈடு பட்டுள்ளனர். பசுமையான காடுகளில் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களிலி ருந்து பரவும் அந்நிய தாவரங்கள் இயற்கை சூழலை கடுமையாக பாதித்து வரு கிறது. காட்டுயிர்களுக்கு தேவையான மரங்கள், செடி, கொடிகளை, மூலிகை தாவரங்கள் போன்றவற்றை வளர விடா மல் பல்கி பரவி வரும் தேவையற்ற  அந்நிய செடிகளில் முதன்மையான தாக இருப்பது சீமை கருவேல மரங்கள். இது ஊரை ஒட்டிய வன எல்லைகளில் பெருமளவு வளர்ந்திருந்த சீமை கரு வேல மரங்கள். தற்போது, காடுகளுக் குள்ளும் பரவி வனத்தின் நீராதாரங் களை மட்டுமின்றி வன உயிரினங்களின் உடல் நலத்தையும் பாதித்து வருகி றது. குறிப்பாக, ‘டெல்லி முள் மரம்’ என்றழைக்கப்படும் சீமை கருவேல மரங்களில் காய்க்கும் விதை காய்களை உண்ணும் காட்டு யானைகளுக்கு கடு மையான வயிற்று கோளாறுகள் ஏற்ப டும். இதனையடுத்து, தமிழக அரசு, தேவையற்ற அந்நிய செடிகளை அகற் றும் திட்டத்தின் கீழ் சிறுமுகை வனச் சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரம், பெத் திக்குட்டை பகுதிகளில் சீமை கருவே லம் மரங்களை வெட்டி அகற்றும் பணி  நடைபெற்று வருகிறது. இது, காட்டி னுள் வேரோடு வெட்டி அகற்றப்பட்ட சுமார் 800 டன் சீமை கருவேல மரங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு விறகு களாக வன எல்லைகளில் அடுக்கி வைக் கப்பட்டு வருகின்றன. இவை நன்கு எரி யும் தன்மையுடைய மரங்கள் என்பதால்  இவற்றை அரசு அனுமதி கிடைத்தவுடன் ஏலம் விட்டு இதில் கிடைக்கும் வரு வாய் மூலம் காடுகளுக்குள் நாவல், விளாமரம், மூங்கில், கொடுக்காபுளி போன்ற காட்டுயிர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் மரங்கள் நடவு செய்து வளர்க்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.