districts

img

மரம் விழுந்து எழுத்தாளர் பலி: ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க சிபிஎம் கோரிக்கை

சென்னை, ஜூன் 25 - மரம் விழுந்து உயிரிழந்த எழுத்தாளர் வாணி கபிலன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. போரூர் மங்களம் நகரை சேர்ந்தவர் எழுத்தா ளர் வாணி கபிலன். இவர் கே.கே.நகரில் உள்ள தனியார் வங்கியின் மேலாள ராக பணியாற்றி வந்தார். வாணியும், அவரது தங்கை எழிலரசியும் வெள்ளி யன்று (ஜூன் 24) காரில் லட்சுமண சாமி சாலை யில் இருந்து பி.டி. ராஜன் சாலைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக வெட்டப்பட்ட பள்ளம் அருகே இருந்த பெரிய மரம் வேரூடன் பெயர்ந்து வாணி சென்று கொண்டிருந்த காரின் மீது விழுந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியதால், வாணி நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். எழிலரசி சாதாரண காயத்துடன் உயிர்தப்பினார். இதுகுறித்து கட்சி யின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்ளாமல், கே.கே.நகரில் பள்ளம் வெட்டி வைத்திருந்தனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் மண் ஊறி மரம் பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த வாணி குடும்பத்திற்கு தமிழக அரசும், மாநகராட்சியும் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும். நகரம் முழுவதும் பாதுகாப்பு இல்லாமல் பள்ளம் வெட்டி இருக்கும் இடங்களில், போர்கால அடிப்படையில் பணிகளை முடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.