districts

img

கே.ஜி.கண்டிகையில் உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிப்பு

திருவள்ளூர், டிச.24- தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் இந்திய சமுதாய நல நிறுவனம் இணைந்து உலக எய்ட்ஸ் தின அனுசரிப்பு நிகழ்வு திருத்தணி அருகே கே.ஜி. கண்டிகை தனி யார் மண்டபத்தில் நடை பெற்றது. தொடர் பணியாளர் திட்ட  மாவட்ட வள மேலாளர் எஸ்.செந்தில்குமார் தலை மையில் நிகழ்ச்சி நடை பெற்றது. மேற்பார்வை யாளர் விஜயகுமார்  வர வேற்றார். நம்பிக்கை மைய ஆலோசகர் கருணாநிதி மற்றும் பத்மா, சதீஷ் ரத்த பரிசோதகர்கள்  ஆகியோர் திட்ட விளக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக கே.ஜி. கண்டிகை  அருட்தந்தை சார்லஸ் டேவிட் இம்மானு வேல் மற்றும் செவ்வாய்   பேட்டை பங்கு தந்தை ஜூடூ  ஆகியோர் நல உதவி கள் வழங்கி சிறப்புரை யாற்றினர். திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், எம்எல்ஏ, நிவாரணப் பொருட்களை நன்கொடையாக வழங்கி னார். இந்நிகழ்வை மேற்பார்வை யாளர் ஏழுமலை ஒருங்கி ணைத்தார்.  நூற்றுக்கும்  மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்றனர். நிறைவாக அனைவருக்கும் சமபந்தி  விருந்து வழங்கப்பட்டது.