சென்னை, ஏப். 1 - அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு மட்டுமல்ல, பெண் ஐபிஎஸ் அதிகா ரிக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் கூறினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகனுக்கு வாக்கு கேட்டு புதனன்று (மார்ச் 31) தா.பி.சத்தி ரத்திலும், வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் அ.வெற்றியழகனுக்கு ஆதரவாக வில்லவாக்கத்திலும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சாத்தான் குளம் காவல் நிலையத்தில் 2 வணிகர்கள் கொடூரமாக அடித்து கொலை செய்துவிட்டு சட்டம் ஒழுங்கை பற்றி பேச முதலமைச்சருக்கு என்ன அருகதை உள்ளதா?
பெண்கள் பாதுகாப்புக்காக ‘காவ லன் செயலி’ வெளியிட்டு அதிமுக பெருமை பேசுகிறது. ஐபிஎஸ் அதிகாரி யான பெண் எஸ்பி-யிடம், சிறப்பு டிஜிபி-யே பாலியல் சீண்டலில் ஈடுபடு கிறார். பொள்ளாச்சி பாலியல் சம்ப வத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரும் அதிமுக-வினராக உள்ளனர். தமிழ கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. பாஜக அணியில் இருந்த ஒரு அமைச்சரே பதவி விலகி, கூட்டணி யிலிருந்து வெளியேறினார். அத்த கைய மோசமான சட்டத்தை அதிமுக ஆதரித்தது. எடப்பாடி பழனிசாமி பச்சை துண்டு போடுவதால் மட்டும் விவசாயி யாக முடியாது. வேளாண் நிலங்களை, விவசாயிகளை பாதுகாக்காமல் விவ சாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டார்.
விவசாய விளை பொருட்களுக்கு 2 மடங்கு கூடுதல் விலை தருவோம் என்று பாஜக கூறியது. ஆட்சிக்கு வந்த பிறகு அதை செய்யவில்லை. இந்தியாவில் உள்ள கரும்பு விவசாயி களுக்கு ஆலை நிர்வாகங்கள் 15 ஆயி ரம் கோடி ரூபாய் பாக்கி வைத்துள் ளன. அதனை மாநில அரசுகள் பெற்றுதரா மல் உள்ளன. இந்த நிலையில் மத்திய அரசு ஒப்பந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. வேளாண் சட்டங்கள் அம லானால், விவசாயிகள் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அடமானம் வைக்கப் படுவார்கள். பாஜக தேர்தல் அறிக்கையில் தமிழ் மொழியை, தமிழ் கலாச்சாரம், பண் பாட்டை சீரழிக்கும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவோம், மாணவர் எண்ணிக்கை குறைந்தால் அரசுப் பள்ளியை மூடுவோம் என்கி றார்கள். உலக சந்தையில் கச்சா எண்ணை 109 டாலரிலிருந்து 59 டாலராக குறைந்த நிலையில், பெட்ரோல் விலை சரிபாதியாக குறைத்திருக்க வேண்டும். மாறாக மறைமுக வரியை உயர்த்தி பெட்ரோலை 95 ரூபாய்க்கு விற்கிறார் கள். இவற்றையெல்லாம் அனுமதிக்க முடியுமா?
எடப்பாடி அரசு மத்திய பாஜக அர சின் ஏவலாளியாக செயல்படுகிறது. மாநில உரிமைகளை மத்திய அரசிடம் பறிகொடுத்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைக்கும் மாநிலக் கட்சிகள் கரைந்து போகும். எனவே, அதிமுகவி னர் இனி ஆட்சி அமைக்க முடியாது. தங்களது கட்சியையாவது காப்பாற்றிக் கொள்ளுங்கள். வில்லிவாக்கத்தில் சிங்காரம் பிள்ளையால் உருவாக்கப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளியை அதிமுகவினர் களவாடியுள்ளனர். ஊழலின் ஊற்றுக் கண்ணாக திகழும் அதிமுகவினர் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சிறை செல்வது உறுதி. மாநிலத்தில் பொதுபட்ஜெட் இருந்தாலும், விவசாயத்திற்கென்று தனி பட்ஜெட் போடப்படும், அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்பன போன்ற மக்கள் நலன் சார்ந்த அம்சங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளது. எனவே, சட்டம் ஒழுங்கை, பெண் களை, கல்வியை, பண்பாட்டை, பாது காக்க அதிமுக-பாஜக அணியை தோற் கடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
தா.பி.சத்திரத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர் த.சுகுமார் தலைமை தாங்கி னார். மத்தியசென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா, பகுதிச் செயலாளர் பெ.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பி னர் மகேந்திர வர்மன், பகுதிக்குழு உறுப்பினர் கே.மணிகண்டன், கிளைச் செயலாளர்கள் ஐ.ஆபேல்பாபு (102வது வட்டம்), ஏ.செந்தில்குமார் (103வது வட்டம்) மற்றும் எம்.பி.ரஞ்சன் குமார் (காங்கிரஸ்), பாபு (திமுக), ராம.அழ கேசன் (மதிமுக), பி.தளபதி (திக) உள்ளிட்டோர் பேசினர். வில்லிவாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிபிஎம் கிழக்கு பகுதி பொறுப்பாளர். ஏழுமலை தலைமை தாங்கினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, பகுதிச் செய லாளர் எம்.ஆர்.மதியழகன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் எல். தாஹாநவின் மற்றும் ஜி.கோதண்டம் (காங்கிரஸ்), பி.டில்லிபாபு (மதி முக), து.அப்புனு (விசிக), பா.சா. அப்துல்ரஹ்மான் (மமக), ஜி.அன்பழ கன் (சிபிஎம்), பு.விஜியானந்த் (தவாக) உள்ளிட்டோர் பேசினர்.