ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ள ஜூஜுவாடியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு 14 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனை இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அங்கு பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், உடனடியாக அந்த கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.