ஊத்துக்கோட்டை, செப்.24- ஊத்துக்கோட்டை அரு கேயுள்ள காக்கவாக்கம் - தொளவேடு கிராம சாலையை 10 ஆண்டாக சீரமைக்கவில்லை என்றும் உடனே சீரமைக்க வேண் டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே காக்கவாக்கம் - தொளவேடு கிராம சாலை குண்டும், குழியுமாகவும், தார் சாலை மண் சாலையாக வும் மாறி படுமோசமாக காணப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததின் பேரில் கடந்த 10 வருடத் திற்கு முன்பு சாலை அமைத் தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக பெய்த மழைக்கு கிராம சாலை குண்டும் குழியுமாக மாறி பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை ஓட்ட இருசக்கரம், ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகன ஓட்டிகளும், பள்ளி வாக னங்களும் செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ள னர்.