ஆம்பூர், ஜூலை 19- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆந்திர மாநில எல்லையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் வனப்பகுதிகளில் நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளது.அலசந்தாபுரம் அருகே ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ராமகுப்பம் மண்டலத்தில் கௌண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக் காடுகளில் உருவாகி வரும் ஓடைகளில் இந்த நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ராமகுப்பம் அருகே உள்ள தேவராஜபுரம்- வெங்கட்ராஜபுரம் இடையே திம்மகெடா நீர்வீழ்ச்சி, பாறை மடுவு நீர்வீழ்ச்சிகள் உள்ளன.இந்த நீர்வீழ்ச்சிகளில் குளிக்க வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றம்பள்ளி, ஆலாங்காயம், திருப்பத்தூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.கடந்த ஆண்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்ததால் ஆந்திர மாநில வனத்துறையினர் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.