விழுப்புரம், டிச.1- விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்குட்பட்டது எடசேரி கிராமம். இங்குள்ள மக்கள் சுகாதாரமான குடிநீர் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் வியாழனன்று (டிச. 1) காத்திருக்கும் போராட்டம் நடத்தி னர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வானூர் ஒன்றிய பெருந்தலைவர் உஷா பி.கே.டி.முரளி, வட்டார வளர்ச்சி அலு வலர்கள், வட்டாட்சியர் ஆகியோர் சிபி எம் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது, குடிநீருக்கான போர்வெல் அமைத்துத் தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை தற்காலி கமாக ஒத்திவைப்பதாகக் கூறி அனைவரும் கலைந்து சென்றனர். ஆனாலும், போர்வேல் அமைக்க ஒரு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். இதனால், மாற்று இடத்தை தேர்வு செய்யமுடியாமல் அதிகாரிகள் பின்வாங்கிச் சென்றனர். இதனால், எடசேரி கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு வட்டச் செய லாளர் எம்.கே.முருகன் தலைமை தாங்கி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் வட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலமுருகன், ஐ.சேகர், கே..லலிதா, ஆர்.சேகர், அஸ்வத்தாமன், முகமது அனாஸ் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.