திருப்பத்தூர்,மார்ச்.3 – திருப்பத்தூர் அடுத்த புலியூர் கிராமத்தை சேரந்த பக்தர்கள் கோயில் வழிபாட்டிற்கு செல்லும் போது ஏற்பட்ட சாலை விபத்தில் 11பேர் உயிரிழந்தனர். திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட ஜவ்வாதுமலை புதூர்நாடு அடுத்த புலியூர் கிராமத்தை 30 பேர் ஞாயிறன்று (ஏப்3) ஆஞ்சநேயர் கோயிலுக்கு வழிபாடு செய்ய மினி வேன் மூலம் சென்றனர். அப்போது வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து 50அடி பள்ளத்தில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 8 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலத்த படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோரை அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சுகந்தா (55) துர்கா (40) பரிமளா (12) பவித்ரா (18) செல்வி (35) மங்கை (60) ஜெயபிரியா (16) திக்கியம்மாள் (47) சின்ன திக்கி(22) அலுமேலு(12) சென்னியம்மாள்(12) ஆகிய 11 பேர் இந்த விபத்தில் இறந்தனர். இந்த விபத்து குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தலைவர் டில்லி பாபு ஞாயிறன்று புலியூர் கிராமத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு ரூ2 லட்சம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. அது போதாது, ரூ.5லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிடவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.