districts

கொங்கு நாடு பிரிவினை முழக்கம் சங்பரிவாரத்தின் சுயநல அரசியலே

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
 

சென்னை, ஜூலை 16- கொங்கு நாடு பிரிவினை முழக்கம் என்பது சங் பரிவாரத்தின் சுயநல அரசியலே என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 13,14 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பி னர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு: தமிழ் நாட்டைச் சார்ந்த எல்.முருகன், ஒன்றிய அரசின் இணை அமைச்சராக பொறுப்பேற்ற போது, அவர் ‘கொங்கு நாட்டை’ சேர்ந்தவர் என்று அரசுக் குறிப்பில் இடம்பெற்றிருந்தது.

அடுத்த சில நாட்களில், தமிழகத்தை துண்டாடி கொங்கு நாடு ‘யூனியன் பிரதேசம்’ உருவாக்கப்பட இருப்ப தாக தினமலர் இதழ் செய்தி வெளியிட்டது. தமிழ கத்தில் உள்ள பாஜகவினர் பலரும் மேற்கு மாவட் டங்களை தனியாக்கி ‘கொங்கு நாடாக’ அறிவிக்க வேண்டும் என பேசிவருகின்றனர். இது தொ டர்பாக கோவை மாவட்ட பாஜக தீர்மானம் நிறை வேற்றியிருப்பதாகவும் தெரிகிறது. கொரோனா பெருந்தொற்று பரவலை எதிர்த்து நாடே கடுமையாக போராடி வருகிறது. ஆனால், தடுப்பூசி தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் கோளாறு.

மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு செய்யவில்லை என்பதுடன் ஜி.எஸ்.டி வரியில் உரிய பங்கினை தருவதிலும், ஜி.எஸ்.டி ஈட்டுத்தொகை வழங்குவதிலும் இழுத்தடிப்பை செய்துவருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக மக்கள் மருத்துவத்திற்கு செய்யும் செலவை குறைத்துக் கொண்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது. நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க ஒன்றிய அரசு மறுப்பதற்கு எதிராக போராட்டங்கள்  நடக்கின்றன. அடக்குமுறைச் சட்டங்களை பயன் படுத்தி கைதுசெய்யப்பட்ட  ஸ்டான் சுவாமி காவலில் மரணமடைந்தார். இது ‘நிறுவனப் படுகொலை’ என்று ஊடகங்கள் வெளிப்படையா கவே விமர்சித்து எழுதின.

இப்படியான ஒன்றிய அரசின் எதேச்சதிகார, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான கோபக்கனலை திசை திருப்பும் நோக்கத்திற்காக, தமிழ்நாட்டை துண்டாடும் பிரச்சாரத்தை சங் பரிவாரம் கையில் எடுத்துள்ளது. மேலும், மொழி வழியாக மாநிலங்கள் அமைவது, மக்களின் உரிமைக் குரல்களை வலிமைப்படுத்தும் என்பதால் ஆர்.எஸ்.எஸ் பரிவாரம் அதனை விரும்புவதில்லை. சிறு,சிறு ஆட்சிப்பகுதிகளாக அவைகளை உடைத்து பலவீனமாக்கி அதன் வழியாக பல மொழி பேசும்  சிறு பிரதேசங்கள், வலுவான ஒற்றை ஆட்சி என்பது தான் பாஜகவை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்த கோட்பாடு ஆகும். இந்த நோக்கத்தில்தான், இந்தியாவின் பல மாநிலங்க ளை அவர்கள் துண்டாடியுள்ளனர். இதனால் அர சியல் பலனையும் அடைந்துள்ளார்கள்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் இயல்பான தேர்வாக அமைந்தது மொழிவாரி மாநிலங்கள். விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்களிப்பும் செய்யாத, சங் பரிவாரத்திற்கு இது குறித்த அக்கறையோ, மக்கள் நலன் குறித்த பொறுப்புணர்வோ கொஞ்சமும் இல்லை. அதி காரத்தை குவித்துக் கொள்வதில் உள்ள வேட்கையே இத்தகைய துண்டாட்ட நிகழ்ச்சி நிரலின் ஒற்றைக் காரணியாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றினால் மக்கள் மடிந்துகொண்டிருக்கும் சூழலிலும், அதிலிருந்து மீள தேவையான அக்கறையை காட்டாத சங் பரி வாரத்தினர், திசை திருப்பல் நோக்கில் மக்களை துண்டாட முன்னெடுக்கும் முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. நாட்டு நலனை பின்னுக்குத்தள்ளி, சொந்த சுயநல அரசியல் நோக்கம் மட்டுமே கொண்டு இயங்கும் சங் பரிவாரத்தின் நோக்கத்தை உணர்ந்து தமிழக மக்கள் இந்த முழக்கத்தை முற்றிலும் புறந்தள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கி றோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.