districts

16 பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்கள்

சென்னை,ஆக.26- நேபாளத்தில் 6 ஆவது இன்டர்நேஷனல் விளை யாட்டு போட்டிகள் நடை பெற்றன. இதில் கோகோ, கராத்தே, சிலம்பம் மற்றும் தடகள போட்டிகள் நடை பெற்றது. இதில் சென்னை யிலிருந்து கலந்து கொண்ட தனியார் பெடரேஷனை சேர்ந்த 17 பெண்களில் 14 பேர் தங்கப் பதக்கமும் 2 பேர் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்தனர். சென்னை திரும்பிய வீராங்கனைகளுக்கு அவ ரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய வீராங்க னைகள், ஒன்றிய-மாநில அரசுகள் உதவியும் ஊக்கமும் அளித்தால் அடுத்த கட்ட போட்டிகளில் பங்கேற்க பயனுள்ளதாக இருக்கும். மேலும் சர்வதேச அளவில் பதக்கங்களை தொடர்ந்து வெல்ல வேண்டும் என்பது எங்களது லட்சியம் என கூறினர்.