கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னியந்தல் கிராமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் ஷேக் ஜாகிர் உசேனுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. விருதுடன் வழங்கப்பட்ட வெகுமதி 8 ஆயிரம் ரூபாயுடன் மேலும் 2 ஆயிரம் ரூபாய் சேர்த்து, 10ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு விழா மேடையிலேயே மாவட்ட ஆட்சியர் பி.என்.சீதரிடம் வழங்கினார். ஷேக்ஜாகிர்உசேன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.