districts

கலாஷேத்ராவில் மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் மாநில அரசு தலையிட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 22 - கலாஷேத்ராவில் மாணவர்களுக்கு  பாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்துள்ளதால், தமிழ்நாடு அரசு  தலையிட வேண்டும் என்று  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஒன்றிய அரசின் கலாச்சார துறையின் நேரடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் இயங்கி வருகிறது திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா ருக்மணிதேவி கவின் கலை கல்லூரி. இங்கு பணி யாற்றும் முக்கிய நபர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நபரால், நூற்றுக்கும் மேற்பட்ட மாண விகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதுகுறித்து மாணவிகள் இணையம் வாயிலாக ரகசியமாக பகிர்ந்துள்ளனர். இந்த செய்தி அடிப்படையில் ‘பாலி யல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் 2013’ இன் படி, கலாஷேத்ராவில் அமைக்கப் பட்டுள்ள, உள் புகார் குழு (ஐசிசி) தாமாக முன்வந்து விசாரித்துள்ளது. அந்தக்குழு, ஒருதலைபட்சமாக அவசர  அவசரமாக விசாரித்து, பாலியல் புகார்கள் பொய்யானவை என்றும், கலாஷேத்ராவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்குடன் கட்டமைக்கப்பட்டவை என்றும் கூறி யுள்ளது. பாலியல் புகார்கள் குறித்து மாணவர்கள் யாரும் இனி பேசவோ, இணையத்தில் பகிரவோ கூடாது என்று கலாஷேத்ரா நிர்வாகம் தடை விதித்துள்ளது. பத்தாண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்களால், அங்கு பயிலும் மாணவ மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளதாக கலாசேத் ராவின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால், ஏதோ நிர்பந்தத்தின் காரணமாக உடனடியாக அவர் அந்த பதிவை நீக்கியுள்ளார். இதுபோன்ற விஷயங்கள் பாலியல் புகார்கள் மீதான சந்தேகங்களை கூடுதலாக்குகிறது.

கலாஷேத்ரா நிர்வாகம் வெளிப் படைத் தன்மையுடனும், பொறுப் புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்று அங்கு பயிலும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் என 600 க்கும் மேற்பட்டோர் கையொப் பமிட்ட மனுவும் இணையம் வாயிலாக வெளிவந்துள்ளது. எனவே, ஒன்றிய அரசின் கல்வி  நிறுவனமாக கலாஷேத்ரா இருந்தா லும், சட்டம், ஒழுங்கு மற்றும் பெண்கள்  பாதுகாப்பு என்ற வகையில் மாநில அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை உயர் அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் விசாரணையை நடத்த வேண்டும். மாநில மகளிர் ஆணை யம் தாமாக முன்வந்து வழக்கு  பதிந்து நடவடிக்கை எடுக்க வேண் டும். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, மருத்துவ ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் விடுத் துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.