districts

வாட்டி வதைக்கப் போகும் வெயில்

சென்னை, ஏப். 11- தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 12 முதல் 15 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை, அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.