சென்னை, ஏப். 5- பணி நீக்கம் செய்யப் பட்ட அனைத்து செவிலி யர்களுக்கும் நிச்சயம் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறினார். சென்னை திருவான்மி யூரில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதா வது: கொரோனா காலத்தில் பணியாற்றிய 2,000 செவிலி யர்களில் 1,000க்கும் மேற் பட்டோருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுவிட்டது. 800 செவிலியர்களுக்கு மட்டும் தற்போதைய சூழலில் பணி வழங்க முடியாத நிலை உள்ளது. விரைவில் 800 செவிலியர்களுக்கு அரசுப் பணி வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பேரிடர் காலத்தில் பணிபுரிந்த ஒரு வரைக்கூட விட்டுவிடாமல் பணி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி யுள்ளார். அதன்படி, அனைவ ருக்கும் பணி வழங்கு வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நிச்சயம் பணி வழங்கப்படும் என்று செவிலியர்களிடம் அரசு தெரிவித்த பிறகும் இந்த போராட்டம் நடந்தது. பேரிடர் காலத்தில் பணி புரிந்தவர்களுக்கு வருங் காலங்களில் அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும். கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து செவி லியர்களுக்கும் நிச்சயம் பணி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறி னார்.