ஆவடி, ஏப் 15- திருமுல்லைவாயலில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (52). இவருக்கு மனைவி மற்றும் பிரதீப் குமார் (18) என்ற மகன் உள்ளனர். இந்நிலையில் வெள்ளி யன்று (ஏப்.15) காலை பிரேம்குமார் வீட்டின் தண்ணீர் தொட்டியில் இறங்கி அதனை சுத்தம் செய்ய முயன்றார். நீண்ட நேரமாகியும் பிரேம்குமார் வராத தால் சந்தேகமடைந்த பிரதீப்குமார், தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார். அவரும் வெளியே வரவில்லை. இதனால் பதற்றமடைந்த மனைவி, எதிர் வீட்டில் வசித்து வந்த பிரேம்நாத் (22) என்பவரை அழைத்து கொண்டு வந்தார். அவரும், தண்ணீர் தொட்டிக் குள் இறங்கினார். அவரும் வெளியில் வரவில்லை. இதையடுத்து, பக்கத்து வீட்டில் வசித்து வரும் சாரநாதன் (50) என்பவரை வரவழைத்து பார்த்தனர். அவரும் தொட்டிக்குள் இறங்கினார். அவரும் வெளியில் வரவில்லை. தொட்டிக்குள் இறங்கிய 4 பேரும் வெளியே வராத தால் பதற்றம் அதிகரித்தது. பின்னர் 4 பேரும் விஷவாயு தாக்கி தொட்டியில் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இதற்கிடையில் தகவல றிந்து அம்பத்தூர் தீயணைப்பு படை வீரர்கள் கவச உடையுடன், தண்ணீர் தொட்டியில் இறங்கி ஒரு மணி நேரம் போராடி 4 பேரையும் மீட்டனர். பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியில் பிரேம்குமார், பிரதீப் குமார், பிரேம்நாத் ஆகியோர் இறந்து விட்டனர். சாரநாதன் ஆபத்தான நிலை யில் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.