மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரம்பூர் பகுதி 36, 37 வட்டக்கிளைகள் சார்பில் திங்களன்று (செப்6) எம்கேபி நகரில் மக்கள் விசாரணை மன்றம் நடைபெற்றது. இதில், ஒன்றிய மோடி அரசின் மீது 14 குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது. விசாரணை நீதிபதியாக எஸ்.கே.மகேந்திரன், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்பவர்களாக பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ.வெற்றிராஜன், ஜெ.பிரமிளா ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக கே.ஜாகீர் வரவேற்புரையாற்றினார். எம்.ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஆர்.மோகன் நன்றி கூறினார்.