மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பெரும்புதூர் வட்டக்குழு சார்பில் ஞாயிறன்று (செப்.12) அஞ்சுகம் நகரில் மக்கள் விசாரணை மன்றம் நடைபெற்றது. இதில், ஒன்றிய மோடி அரசின் மீது 14 குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை நீதிபதியாக மாவட்டச் செயலாளர் சி.சங்கர், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்பவர்களாக. டி.லிங்கநாதன், டி.பிரேமா, ஆர்.சுகுமார், எஸ்.விஜயகுமார், எம்.இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக ஆர்.தேவேந்திரன் வரவேற்புரையாற்றினார். தலைமை எம்.எஸ்.ராஜா தாங்கினார். ஆர்.ராஜகோபால் நன்றி கூறினார்.