காஞ்சிபுரம், ஜூலை 27- காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 30ம் தேதி விவசாயிகள் கூட்டம் இணையவழி மூலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகளின் குறைகளை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறும். இதில் விவசாய சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்சிகளும் மனுக்களாகவும், நேரடியாகவும் தெரிவிக்கலாம். தற்போது கொரோனா விதிமுறைகளால் தடை செய் யப்பட்ட இந்த நிகழ்வு, இம்மாதம் முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இம் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் ஜூலை 30 அன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இணையவழி மூலம் நடை பெற உள்ளது. விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக் களை அந்தந்த வட்டார அலுவலகத்தில் அளிக்கலாம். அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி தெரி வித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது என்று தகவல் மாவட்ட ஆட்சி நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயி கள் நலன் காக்கும் கூட்டத்தை நேரடியாக விவசாயிகள் அழைத்து விவசாயிகளின் குறைகளை கேட்குமாறும், 30 அல்லது 40 விவ சாயிகள் மற்றும் விவசாய சங்கம் பிரதிநிதி களை அழைத்து கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் மாவட்டச் செயலாளர் கே.நேரு, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகளை வைத்துள்ளார்.