சென்னை, ஜன. 13- தாய்மொழி கல்விதான் மாண வர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்று நிர்மல் பள்ளி ஆண்டு விழா வில் அ.சவுந்தரராசன் கூறினார். ஒர்க்கர்ஸ் எஜூகேஷனல் டிரஸ்ட் - சிஐடியு நடத்தும் சென்னை அயனாவரத்தில் உள்ள நிர்மல் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா வியாழனன்று (ஜன. 12) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செய லாளர் அ.சவுந்தரராசன் தலைமை தாங்கி பேசுகையில், வீட்டில் படிப்புச் சூழலே இல்லாத நிலையில் உள்ள குழந்தைகளை கை தூக்கி விட வேண்டும், தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த பள்ளி நடத்தப்படுகிறது. 10ஆம் வகுப்பு வரை மட்டுமல்ல, அதற்கு மேலும் உயர்கல்வி, தொழிற்கல்வி, போட்டித் தேர்வுகள் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கும் வகையில் அடித்தளம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பள்ளியை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதர மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு இணையாக எந்த கட்டண மும் வாங்காமல் பல்வேறு வசதி களை செய்து கொடுத்துக் கொண்டி ருக்கிறோம். அதற்குண்டான செலவு களை சிஐடியு தொழிலாளர்கள் வழங்குகிறார்கள். பல லட்சம் மதிப்பிலான ஸ்மார் கிளாஸ் வசதியை தற்போது உயர்நிலைப் பள்ளியில் ஏற்படுத்தியுள்ளோம். வரும் ஆண்டில் அதை தொடக்கப் பள்ளியிலும் அமைக்க இருக்கிறோம். மற்ற பள்ளிக் குழந்தைகள் சீருடை அணிவதை போல் இந்த பள்ளி மாணவர்களும் அணிய வேண்டும் என்ற நோக்கத்துடன் வருடத்திற்கு இரண்டு செட் சீருடை இலவசமாக வழங்குகிறோம். பிற பள்ளி மாணவர்களைப் போல தலைநிமிர்ந்து நிற்க முடியும் என்ற தன்னம்பிக்கையை மாணவர்களிடத்தில் உருவாக்கி யிருக்கிறோம். அதேபோல் கொரோனா காலத்தில், வீட்டில் இருந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு போக்குவரத்து ஊழியர்கள் 6 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இல வச மாக செல்போன் வாங்கிக் கொடுத்தார்கள்.
பெற்றோர்களுக்கு வேண்டுகோள் |
தமிழ் மொழியில் பயில்வதால் மாணவர்களுக்கு எந்த இழப்பும் கிடையாது. ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட எந்த ஒரு மொழியையும் பயில்வதில் தவறில்லை. ஆனால் அறிவை தாய் மொழியில்தான் பெற முடியும். எப்படி தாய் பாலுக்கும், இதர பாலுக்கும் அடிப்படையில் வித்தியாசம் இருக்கிறதோ, தாய்ப்பாலை தவிர வேறு எந்த பாலும் ஒரு குழந்தைக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்காதோ, அதுபோல்தான் தாய் மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் சிறந்த வளர்ச்சியை கொடுக்காது. எனவே தமிழ் வழியை கல்வியை புறக்கணிக்க வேண்டாம். தமிழ் வழி கல்வியில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்களும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அ.சவுந்தரராசன் உரையிலிருந்து |
கணினி பயிற்சி
கணினி பயிற்சிகளையும் அளிக்கின்றோம். பாரம்பரிய இசை, செஸ், சிலம்பம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்டவற்றையும் அவர்களுக்கு கற்றுக் கொடுப்ப தற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஸ்போக்கன் இங்கிலிஷ் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துகிறோம். மாணவர்களும் சிறப்பாக படிக்கின்றனர். கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வில் இந்த பள்ளி மாணவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
புரிந்த மொழியில் படித்திடுக
13 வயது வரை தாய் மொழியில் படிக்கும் குழந்தைகள்தான் சிறந்த வளர்ச்சி பெற முடியும். அயல் மொழியில் படித்தால் சில குறை கள் இருக்கும். ஏனென்றால் தனக்கு தெரிந்த, புரிந்த மொழி யில் படித்தால் அதை முழுமை யாக உள்வாங்கி கற்றுக் கொள்ள முடியும். சீனா, ரஷ்யா, நெதர்லாந்து உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் தாய் மொழியில்தான் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் பொறியியல் படிப்பு களை தமிழ் வயிழிலே பயிற்று விப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மருத்துவக் கல்வியையும் தமிழ்மொழி வழியாக பயிற்று விக்கப் போகிறோம் என அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றார் சவுந்தரராசன். தொடக்கப்பள்ளியின் ஆண்ட றிக்கையை தலைமை ஆசிரியர் ஆர்.கலைச்செல்வியும், உயர்நிலைப் பள்ளியின் ஆண்டறிக்கையை தலை மையாசிரியர் டயானா ஜூலியட்டும் சமர்ப்பித்தனர். கல்விக் குழு உறுப்பினர் திருச்செல்வன், 98ஆவது வார்டு மாமன்ற உறுப்பி னர் ஆ.பிரியதர்ஷினி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக பல்வேறு விளை யாட்டு போட்டிகளில், கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலை வர்கள் பரிசு வழங்கி பாராட்டினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதில் கல்விக் குழு தலை வர் பூபாலன், உறுப்பினர் நாராயணன், பொறுப்பாளர் டில்லி பாபு, சிஐடியு மூத்த தலைவர் வே.மீனாட்சி சுந்தரம், மத்திய மாவட்டச் செயலாளர் சி.திரு வேட்டை, ஏ.பி.அன்பழகன், எம்.சந்திரன் (போக்குவரத்து), ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் பா.ராஜா ராமன் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் கலந்து கொண்ட னர்.