districts

img

என்எம்ஆர் தொழிலாளர்கள் பணிவரன்முறை செய்திடுக அமைச்சர் கே.என்.நேருவிடம் செங்கொடி சங்கம் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 19 - என்எம்ஆர் தொழிலா ளர்கள் பணிவரன்முறை செய்ய வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு விடம் சென்னை மாநக ராட்சி செங்கொடி சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக நக ராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை ஞாயிறன்று (மார்ச்19) சந்தித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.சீனி வாசலு உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது: கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியுடன் 7 நகராட்சி கள், 14 பேரூராட்சிகள் மற்றும் 12 ஊராட்சிகள் 10 இணைக்கப்பட்டது. இங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த தினக்கூலி தொழிலாளர்கள் (என்எம்ஆர்)பணித் தொடர்ச்சியுடன்  மாநகராட்சி யில் இணைக்கப்பட்டனர். இந்த தொழிலாளர்  களை பணி நிரந்தரம் குறித்து 2014ம் ஆண்டு சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் 27.5.2015 அன்று மன்றக் கூட்டத்தில் தீர்மானம் (எண்.27) நிறை வேற்றப்பட்டு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு அர சாணை வேண்டி (பொ.து. ந.க.எண்.ஜி 4/53573/2014) அனுப்பப்பட்டு நிலுவை யிலுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் 2016ம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி சங்கத்துடன் நடத்திய பேச்சு வார்த்தையில், தொழி லாளர்கள் விரைவில் பணி வரன்முறை செய்வ தாக உறுதிமொழி அளித் தது. ஆனால், அத ன் படி தொழிலாளர்கள்  பணி வரன்முறை செய்யப்பட வில்லை.

இந்தக் காலகட்டத்தில் தொழிலாளர்களில் 25 பேர் மரணமடைந் துள்ளனர். கட்டாய ஓய்வில் பலரை நிர்வாகம் அனுப்பியுள்ளது. ஓய்வில் சென்றவர்களுக்கு  பணிக்கொடையும் வழங்க வில்லை. இவர்களோடு பணிபுரிந்து குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்தில் இணைக்கப் பட்ட தொழிலாளர்கள் பணி வரன்முறை செய்யப் பட்டுள்ளனர். இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் பல முறை கடிதம்  அளித்து முறை யிட்ட பிறகு தலைமைச் செய லகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையினுடைய செய லாளர் முன்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்பொழுது விரைந்து பணி வரன்முறை செய்வதாக அளித்த உறுதிமொழியை தொடர்ந்து, தொழிலாளர்  களை மருத்துவ பரி சோதனை செய்து, ஆவ ணங்களும் சரிபார்க்கப் பட்டன. இருப்பினும்,   தொழி லாளர்கள் பணிவரன்முறை செய்யப்படவில்லை. எனவே, என்எம்ஆர் தொழி லாளர்களை விரைந்து பணி வரன்முறை செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், பரி சீலனை செய்து உரிய நட வடிக்கை எடுக்க அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வின் போது சங்கத்தின் தலைவர் ஜெ.பட்டாபி, பொருளாளர் பா.ராஜேந்திரன், துணைப் பொதுச் செயலாளர்கள் டி.ராஜன், ஜி.முனுசாமி, சென்னை மாநகராட்சி கூட்டு றவு ஊழியர் சங்க தலை வர் வரதராஜன், சென்னை மாநகராட்சி ஆணை யர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்த னர்.