சென்னை, ஆக. 20- கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த எம்.சாண்ட் மணல் லாரி உரிமை யாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறி வித்தனர். தமிழகத்தில் கனிமங்கள் வெட்டி எடுப்பதில், எம்.சாண்ட் தயாரித்து விற்பனை செய்வதில் நடக்கும் முறை கேடுகளையும், கொள்ளை யையும், மலை சரிவில் நடக்கும் உயிரிழப்புகளை யும் தடுத்து நிறுத்த அரசு உடனடியாக மின்னணு வழி கட்டண ரசீது நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என அனைத்து எம்.சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமை யாளர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வெள்ளிக் கிழமை (ஆக. 19) முதலமைச் சரை சந்தித்து சங்க நிர்வாகிகள் பேசினர். இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் யுவராஜ் செய்தி யாளர்களிடம் கூறுகையில், கனிமங்களை வெட்டி எடுப்பதில் இணையவழி பாஸ் வேண்டும், அதிக லோடு ஏற்ற மாட்டோம் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்து கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம். வெள்ளிக் கிழமை அண்ணா அறிவா லயத்தில் முதலமைச்சரை சந்தித்து பேசினோம். போக்குவரத்துத் துறை அமைச்சரை திங்கட் கிழமை (ஆக. 22) சந்திக்க வுள்ளோம். எனவே கால வரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுகிறோம். இனி வழக்கம் போல மணல் மற்றும் எம் சாண்ட் லாரிகள் இயங்கும் என்றார். மேலும் திங்கட்கிழமை அமைச்சரை சந்தித்த பிறகும் உரிய தீர்வு கிடைக்க வில்லை என்றால் மீண்டும் ஆலோசனை செய்து தமிழ் நாடு தழுவிய போராட் டத்தை முன்னெடுக்க திட்ட மிடுவோம் என்றும் தெரிவித்தார்.