சென்னை, பிப். 21- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 32 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது. அதில் பதிவாகும் வாக்குகள் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப் படுகிறது. தமிழகம் முழுவதும் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கு நடக்கும் இத்தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை 268 மையங்க ளில் நடக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 32 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு கள் செய்யப்பட் டுள்ளன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுக ளுக்கான வாக்குகள் 15 மண்டலங்க ளாக பிரிக்கப்பட்டு 15 மையங்களில் நடக்கிறது. ஒரு மண்டலத்திற்கு 14 வார்டுகள் வீதம் பிரிக்கப்பட்டு ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. 1 முதல் 14 வார்டுகள் வரை திரு வொற்றியூர் வெள்ளையன் செட்டி யார் மேல்நிலை பள்ளியிலும், 15 முதல் 22 வார்டுகள் வரை மணலி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 23 முதல் 33 வார்டுகள் வரை சூரப்பட்டு வேலம்மாள் பொறியியல் கல்லூரியிலும் நடக்கிறது. 34 முதல் 48 வார்டுகள் வரை தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி யிலும், 49 முதல் 63 வார்டுகள் வரை பிராட்வே பாரதி மகளிர் கல்லூரியி லும், 64 முதல் 78 வார்டுகள் வரை புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி யிலும் எண்ணப்படுகிறது.
79 முதல் 93 வார்டுகள் வரை முகப்பேர் தாய் மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியிலும், 94 முதல் 108 வார்டுகள் வரை பச்சையப் பன் கல்லூரியிலும், 109 முதல் 126 வார்டுகள் வரை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியிலும் எண்ணு வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வார்டுகள் 127 முதல் 142 வரை உள்ள ஓட்டுகள் விருகம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லூரியி லும், 143 முதல் 155 வார்டுகள் வரை மதுரவாயல் எம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரியிலும், 156 முதல் 167 வார்டுகள் வரை ஆலந்தூர் ஏ.ஜே.எஸ். நிதி மேல்நிலை பள்ளியிலும் எண்ணப்படுகிறது. வார்டுகள் 168 முதல் 180 வரை கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்திலும், 181 முதல் 191 வார்டுகள் வரை பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியிலும், 192 முதல் 200 வார்டுகள் வரை சோழிங்க நல்லூர் முகமது சாதிக் கலை அறிவி யல் கல்லூரியிலும் எண்ணப்படு கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் நகராட்சி, மாங்காடு நகராட்சி ஓட்டுகள் மாதா பொறியியல் கல்லூரியிலும், காஞ்சி புரம் மாநகராட்சி, வாலாஜாபாத், உத்திரமேரூர், திருப்பெரும்புதூர் பேரூராட்சி வாக்குகள் காரியாப் பேட்டை அண்ணா பல்கலைக் கழகத்திலும் எண்ணப்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி மாநகராட்சி, திருநின்ற வூர் நகராட்சி ஓட்டுகள் பட்டாபிராம் இந்து கல்லூரியிலும், பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள், திருமழிசை பேரூராட்சி வாக்குகள் சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் எண்ணப்படு கின்றன. திருத்தணி நகராட்சி வாக்குகள் சுப்பிரமணியசாமி அரசு கலை கல்லூரியிலும், திருவள்ளூர் நகராட்சி ஓட்டுகள் திருமுருகன் கலை கல்லூரியிலும், பொன்னேரி நகராட்சி ஓட்டுகள் உலக நாத நாராயணசாமி அரசு கலை கல்லூரியிலும் எண்ணப் படுகின்றன.
கும்மிடிப்பூண்டி
ஆரணி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், நாரவாரிகுப்பம் ஆகிய பேரூராட்சிகளின் ஓட்டுகள் பஞ்சட்டி வேலம் மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி யிலும் எண்ணப்படுகிறது. பள்ளிப் பட்டு, பொதட்டூர் பேரூராட்சிகளின் ஓட்டுகள் அரசு மேல்நிலை பள்ளி யிலும், ஊத்துக்கோட்டை பேரூ ராட்சி ஓட்டுகள் டான் பாஸ்கோ மெட்ரி குலேஷன் பள்ளியிலும் எண்ணப் படுகின்றன.
தாம்பரம் மாநகராட்சி
தாம்பரம் மாநகராட்சி வாக்குகள் எம்.ஐ.டி. கல்லூரி யிலும், செங்கல் பட்டு நகராட்சி ஓட்டுகள் செயின்ட் ஜோசப் மேல் நிலை பள்ளியிலும், நந்திவரம், கூடுவாஞ்சேரி நகராட்சி ஓட்டுகள் மறைமலை நகர் நகராட்சி ஓட்டுகள் ஜே.ஆர்.கே. மெட்ரிக் பள்ளியில் எண்ணப்படுகிறது.
மதுராந்தகம் நகராட்சி
மதுராந்தகம் நகராட்சி ஓட்டுகள் சவுபாக்மால் சவுகார் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியிலும், அச்சிரப்பாக்கம், கருங்குழி பேரூ ராட்சிகளின் ஓட்டுகள் அச்சிரப் பாக்கம் செயின்ட் ஜோசப் பள்ளி யில் எண்ணப் படுகிறது. இடைக்கழிநாடு பேரூராட்சி ஓட்டு கள் கடப்பாக்கம் அரசு மேல் நிலை பள்ளியிலும், மாமல்லபுரம் பேரூராட்சி, திருப்போரூர் பேரூ ராட்சி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி ஓட்டுகள் திருக்கழுக்குன்றம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் எண்ணப்படுகிறது. 4 மாவட்ட வாக்குகள் எண்ணக் கூடிய இந்த மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. வேட்பாளர்களின் முகவர்கள் காலை 6மணிக்கே வாக்கு எண்ணும் மையங்களுக்கு வந்துவிடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.