சிதம்பரம், ஏப். 20- சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (42). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தீபா (32). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. 8 வயதில் சஞ்சீவி என்ற மகனும், 5 வயதில் சஞ்சனா என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் உருட்டு கட்டையால் தீபாவை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி இறந்தது கூட தெரியாமல் ஆனந்த் போதையில் அவரது உடல் அருகிலேயே படுத்து தூங்கியுள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.