சிதம்பரம், மே 7- சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் 32 பயிற்சி மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்ட ணத்தை வசூலிக்காமல், தனியார் கல்லூரி களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கபடு கிறது. அதேபோல் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவி தொகை ரூ 21,200 வழங்காமல் மாதம் 3,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த சொற்ப உதவித் தொகையும் கடந்த 5 மாதத்திற்கும் மேலாக வழங்கப்படவில்லை. இந்நிலையில் உடனடியாக உதவித் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போரட்டத்தின் விளைவாக வியாழக்கிழமை (மே 6) முதல் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதற்கிடையே கல்லூரி நிர்வாகம் 5 மாத உதவித் தொகை 11,200 ரூபாய் என மருத்து வர்களின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது. இதுகுறித்து பயிற்சி மருத்துவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, கல்லூரி நிர்வாகம் நிதிச் சிக்கலில் உள்ள தாகவும், இவ்வளவுதான் வழங்க டியும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து நிதிச் சிக்க லில் உள்ள கல்லூரிக்கு பயிற்சி மருத்து வர்களின் ஒரு நாள் உதவித் தொகையான 100 ரூபாயை வழங்குவதாக அறிவித்தனர். அதனடிப்படையில் அனைத்து பயிற்சி மருத்துவர்களிடமும் உண்டியல் மூலம் தலா 100 ரூபாய் வசூல் செய்து 2,700 ரூபாயை கல்லூரி பதிவாளருக்கு காசோலை மூலம் அனுப்ப்பி வைத்துள்ளனர். கொரானா தொற்று பாதிக்கப்பட்டு 420 நோயாளிகள் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ள நிலையில் பயிற்சி மருத்து வர்களின் நியாயமான கோரிக்கையை புதிய அரசும், கல்லூரி நிர்வாகமும் நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.