விழுப்புரம், ஜூலை 28 - எஸ்.சி, எஸ்.டி., பின்ன டைவு காலிப் பணியிடங்க ளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்பு ரம் மக்களவை தொகுதி உறுப்பினர் துரை.ரவிக்குமார் ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சரிடம் மனு அளித்தார். நாடாளுமன்றத்தில் கடந்த 20ஆம் தேதி இது தொடர்பாக அவர் எழுப்பிய கேள்விக்கு, பிரதமர் அமைச்சகத்தின் சார்பில் பதிலளிக்கப்பட்டது. அதில், ஒன்றிய அரசின் பத்து துறைகளில் பல்லாயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தெரியவந்தது. தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராள மானோர் படித்து விட்டு வேலையின்றி உள்ளனர். இப்பிரி வினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருப்பது அந்த சமூகத்தை பாதிப்பதாக உள்ளது. கல்வித்துறையில் எஸ்.சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 81 விழுக்காடு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, இதில் கவனம் செலுத்தி உடனடியாக பின்னடைவு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.