கடலூர், செப்.11- கடலூர் மாவட்டத்தில் மது குடித்த கணவனால் மகள், மகனுடன் தாய் வெள்ளியன்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி உள்ளது. ப.எடக்குப்பம் கிராமம். அந்த பகுதியைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (41) கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (40), மகள் திவ்யா (17), இருப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பும் மகன் திவாகரன் (15) கோட்டேரி அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பும் படித்து வந்தனர். பாக்கியராஜிக்கு குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால், விரக்தியடைந்த பாக்கியலட்சுமி தனது மகள், மகன் ஆகியோர் அருகில் உள்ள முந்திரி தோப்பில் ஒரே மரத்தில் மூன்று பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அங்கிருந்தவர்கள், அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது மூவரும் இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தனர். தகவல் அறிந்து வந்த ஆலடி காவல்துறையினர் 3 பேரின் உடல்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.